கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ரன்யா ராவ். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவ்வோட வளர்ப்பு மகளான ரன்யா ராவ், கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபல நடிகையான இவர், கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துபோது தனது உடலில் 14 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுவரைக்கும் 45 நாடுகளுக்கு சென்றுவந்த ரன்யா ராவ் துபாய்க்கு மட்டும் 27 முறை போயிட்டு வந்துள்ளார். அங்க இருந்து திரும்பி வரும்போதெல்லாம் தங்கம் எடுத்து வந்துள்ளார். இந்த சூழலில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளோட சோதனையில் ரன்யா ராவ் சிக்கியுள்ளார். அவருடைய பெங்களூரு வீட்டிலும் சோதனை நடந்தது. 4 மணி நேரம் நடந்த சோதனையில், ரூ.2.67 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: 14.8 கிலோ தங்கம் கடத்திய வாகா பட நடிகை ரன்யா...! தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ்..!
இந்த பணம் பீரோவிலோ, லாக்கரிலோ வைக்காத ரன் யா கட்டுக்கட்டாக கட்டில் மெத்தைக்கு அடியில பணத்த பதுக்கி வைத்துள்ளார். சீக்ரெட் லாக்கரில் ரூ.2.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ்வ, மார்ச் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல வைக்க உத்தரவிட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில அடக்கப்பட்டுள்ளார்..

இதுக்கு இடையே தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ரன்யா மனுதாக்கல்லல் செய்தார். அதில் ரன்யா ராவை 3நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில துபாயில் இருந்து தங்கம் கடத்திவர தன்னை சிலர் மிரட்டியதாக ரன்யா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் பிரபல நடிகை கைது... உடலில் இத்தனை கிலோவா!!