பகல்காம் தாக்குதல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதிகளின் கோரத்தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நதிநீர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்துவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஆங்காங்கே தங்கி இருக்கும் பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இதையும் படிங்க: PoK-வை கைப்பற்ற இந்தியா திட்டம்? அடுத்தக்கட்ட நடவடிக்கையால் பாக். அதிர்ச்சி!!

அதில், மாண்புமிகு பிரதமர் அவர்களே, நம் நாட்டின் ஒற்றுமை மிகவும் அவசியமான இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று எதிர்கட்சிகள் நம்புவதாக கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று பகல்காமில் அப்பாவி குடிமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை சமாளிப்பதற்கான நமது கூட்டு தீர்மானத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த நிரூபணமாக இந்த கூட்டம் அமையும் என்றும் இது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை எனவும் கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘நம்முடைய தர்மம் குண்டர்களுக்கு பாடம் புகட்டுவதுதான்’.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசகம்..!