பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் குறிப்பிட்டு மோகன் பகவத் பாகிஸ்தானின் கொடூரச் செயலை விமர்சித்துள்ளார். டெல்லியில் நேற்று எழுத்தாளரும் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மூத்த தலைவர் ஸ்வாமி விக்யானந்த் எழுதிய “தி இந்து மேனிபெஸ்டோ” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நம்முடைய (இந்து) தர்மம் என்பது குண்டர்களிடம் அடிவாங்குவது அல்ல. அந்தக் குண்டர்களுக்கு நாம் பாடம் புகட்டுவதுதான் தர்மம். மன்னரின் கடமை என்பது மக்களைப் பாதுகாப்பது, இந்த கடமையை மன்னர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!
ராமாயண கதையில் உள்ள நிகழ்வை உதாராணமாகக் கொள்ளலாம். இலங்கை வேந்தன் ராவணனுக்கு அரசனுக்குரிய அனைத்து தகுதிகளும் இருந்தது, சிறந்த மன்னராக விளங்கினார், சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார், உலகிலேயே மிகச்சிறந்த தீவிர சிவபக்தராகவும் ராவணன் இருந்தார். ராவணன் நல்ல மன்னராக இருந்து, அனைத்தையும் செய்தார், ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். ஏனென்றால், ராவணன் தன்னுடைய தகுதிகள், திறன்கள், திறமைகள் அனைத்தையும் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தாததால் கொல்லப்பட்டார்.

இதிலிருந்து என்னத் தெரிகிறது, நீங்கள் என்ன செய்தாலும், ராவணனைப் நல்ல மனிதராக மாற்ற முடியாது என்பதுதான். ஒரே ஒருவாய்ப்புதான் இருந்தது, அது அவரை தவிர்த்துவிட்டு செல்வதுதான். ராவணனுடைய அப்போதைய உடல் அழிக்கப்பட்டு, இன்னொரு ஆன்மாவையும் உடலையும் பெற முடியும் என்பதால்தான் கடவுள் அவரைக் கொன்றார், இந்தக் கொலை வன்முறை அல்ல; அது அகிம்சை மட்டுமே.

இந்தியாவின் இயல்பான தன்மை அஹிம்சைதான். அஹிம்சைதான் மக்களின் மனதில் மாற்றத்தை கொண்டுவரும். சில மக்களை நாம் அஹிம்சையாளர்களாக மாற்றவிடலாம், ஒரு சிலரை நம்மால் மாற்ற முடியாது. அவர்களுக்காக, சாதகமாக என்ன செய்தாலும் அவர்கள் மாறமாட்டார்கள். அவர்கள் உலகிற்கு எப்போதுமே ஏதேனும் தொந்தரவு கொடுக்கவே செய்வார்கள். அந்த சூழலில் ஒருவரால் என்ன செய்ய முடியும். பகவத் கீதையில் ஒன்று சொல்லப்பட்டுள்ளது, பாண்டவர்களில் அர்ஜூனன் தனது சொந்த சகோதரர்களையே கொன்றான். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு ஒரே வழி"..
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!