டீசலுக்கான விற்பனை வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கர்நாடக அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்குமுன் கர்நாடகத்தில் டீசலுக்கான விற்பனை வரி 18.44 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 21.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் டீசல் விலை லிட்டர் ரூ.91.02 ஆக இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசு அதிரடியாக பல்வேறு சேவைகளின் வரியை உயர்த்தி வருகிறது. குறிப்பாக சொத்து வரியை உயர்த்தியது, மின்சாரக் கட்டணத்தை மாற்றி அமைத்தது, பால் விலையை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல் வீடுகள் முதல் வணிக நிறுவனங்கள் வரை குப்பைகளை சேகரிக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்து, அதற்குரிய கட்டணத்தையும் பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது.
இதையும் படிங்க: 150 அடி தேர் சாய்ந்து விபத்து! பரிதாபமாக பறிப்போன உயிர்கள்...
2021 நவம்பர் 4ம் தேதி கர்நாடகத்தில் டீசலுக்கு 24 சதவீதம் விற்பனை வரி இருந்தது, லிட்டர் ரூ.92.03 ஆக விற்கப்பட்டது. ஆனால் 2024 ஜூன் மாதம் டீசலுக்கான விற்பனை வரியை 18.44 சதவீதமாகக் குறைத்து டீசல் விலையை ரூ.89.02 ஆக்கியது.

விற்பனையை வரியை கர்நாடக அரசு உயர்த்தினாலும், அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான். ஏனென்றால் 2025, மார்ச் 31ல் தமிழகத்தின் ஹோசூரில் டீசல் விலை லிட்டர் ரூ.94.66, கேரளாவின் காசர்கோட்டில் டீசல் லிட்டர் ரூ.95.66, ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் டீசல் லிட்டர் ரூ. 97.35, தெலங்கானாவில் ஹைதராபாத்தில் டீசல் விலை ரூ.95.70 ஆகவும், மகாராஷ்டிராவின காகலில் டீசல் லிட்டர் ரூ.91.07ஆகவும் இருக்கிறது.

டீசல் விற்பனையை அதிகரித்தது நியாயமானது, மற்ற மாநிலங்களில் டீசல் விலையைவிட கர்நாடகத்தில் குறைவுதான் என்று கர்நாடக அரசு தெரிவி்க்கிறது. டீசல் விற்பனை வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயால் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளையும், மக்கள் விழிப்புணர்வுத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சில்வண்டு சிக்காதேய்... அரசியவாதிகளின் ஹனிட்ராப் வீடியோ: சிட்டாய் பறக்கும் சித்தராமய்யா..!