மத்தியப் பிரதேசத்தில் உள்ள மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள கச்சாரியா என்ற பகுதி அருகே 10 பேர் வேனில் கோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனம் மீது மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில், உள்ளூர்வாசி ஒருவர் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி..!

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார்.

இதனிடையே, இந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது..! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே..!