மகாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட இருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரேவும், சிவேசனா உத்தவ் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவும் இணைய உள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், மராத்திய மக்களின் நலனையும், மொழியையும் காக்கும் பொருட்டு, தங்களுக்குள் இருக்கு சிறிய மனஸ்தாபங்களை மறந்து இருவரும் இணைய உள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென தலை வழுக்கை, விழும் நகங்கள்.. வினோத நோயால் மகாராஷ்டிரா கிராம மக்கள் அவதி..!
திரைப்பட இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கருடன் இணைந்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேட்டியளித்தார். அப்போது அவரிடம் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படுவதற்கு விருப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராஜ் தாக்கரே அளித்த பதிலில் “சிவசேனா உத்தவ் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல், விருப்பமாக இருந்தால், எனக்கு அவருடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை. மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாகும்போது இதுவோன்ற சிறிய சண்டைகள், பிரச்சினைகள் இருவருக்குள் இருப்பது சிறியதாகிவிடும்.
மகாராஷ்டிரா மற்றும் மராத்திய மக்களுக்காக பார்க்கும்போது, எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள், முக்கியத்துவம்இல்லாமல் போய்விடும். இருவரும் ஒன்றாக இணைவது கடினமானது. ஆனால், இருவரும் இணைந்து செயல்பட விருப்பம் இருக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பமோ அல்லது தனிப்பட்ட நலனுக்காகவோ இதைக் கூறவில்லை, மிகப்பெரிய விஷயங்களை மனதில் வைத்துதான் இதை பேசுகிறேன்” எனத் தெரிவித்தார்.

சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்ரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே. பால் தாக்ரேவுக்கு பின் ராஜ்தாக்ரேதான் கட்சிக்குள் முக்கியத்துவமான இடத்தில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது அவரை உயரவிரவிடாமல் பால்தாக்கரே தடுத்தார். இதனால் ஏற்பட்ட மனகசப்பில் சிவசேனா கட்சியைவிட்டு விலகிய ராஜ் தாக்கரே 2005ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் தாக்கரேயின் கருத்து குறித்து சிவசேனா உத்தவ் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்கப்பட்டது. அவர் அளித்த பதிலில் “ எங்கள் இருவருக்கும் இருக்கும் சிறிய சண்டைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, மராத்திய மக்களின் நன்மைக்காக இணைவதற்கு தயாராக இருக்கிறோம். அதேநேரம், நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன், முதலில், மகாராஷ்டிராவின் நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாற மாட்டீர்கள் என்று முடிவு செய்யுங்கள், பின்னர் மட்டுமே மாநிலத்தின் நலனைப் பற்றி பேசுங்கள். அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் ராஜ் தாக்கரே இருக்கிறார்.

மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்திற்கு தொழிற்சாலைகள் மாற்றப்படுகின்றன என்று நான் கூறிக்கொண்டிருந்தபோது, அந்த நேரத்தில் எதிர்ப்பு இருந்திருந்தால், இன்று பாஜக அரசு மத்தியில் இருந்திருக்காது. மகாராஷ்டிராவின் நலன்களைப் பற்றி சிந்திக்கும் ஒரு அரசாங்கம் அந்த மாநிலத்தில் இருந்திருக்கும். ஆனால் நீங்கள் பாஜகவை ஆதரித்தீர்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ‘இந்தி மொழி’யை திணித்தால் போராட்டம் வெடிக்கும்.. ராஜ் தாக்ரே எச்சரிக்கை..!