அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர ஏன் விமானம் அனுப்பவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேர்தல் நெருங்கும் போதெல்லாம் ஊடுருவல் பற்றி பாஜக பேசுவதாகவும் நமது குடிமக்கள் அமெரிக்காவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவதாகவும் இது நாட்டுக்கு அவமானமான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷம்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!

நமது நாட்டு மக்கள் நாடு திரும்பவதை மத்திய அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் கொலம்பியா தனது குடிமக்களை அழைத்து வர விமானம் அனுப்பும் நிலையில் மத்திய அரசு ஏன் விமானம் அனுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் உதவியோடு வாக்காளர் பட்டியலை பாஜக கையாளும் முறை தெரிவதாகவும் டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய இடங்களில் போலி வாக்காளர்களை சேர்த்து பாஜக வெற்றி பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.

ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைக் கொண்டு வந்து மேற்கு வங்கத்தில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கும் என்று எச்சரித்த அவர், 2006 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தன்னால் தேவைப்பட்டால் வாக்காளர் பட்டியலை சரி செய்து போலி வாக்காளர்களை நிக கூறி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காலவரையற்ற தர்ணாவில் ஈடுபடலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!