தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிசிடிவி மற்றும் ரோந்து போலீசாரால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. குற்றவாளிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ரயில் நிலையத்தில் பெண் போலிஸ் மீது நடந்த பாலியல் அத்துமீறல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மீண்டும் பெண் மீது பாலியல் தொல்லை அரங்கேற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மாலை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண் ஒருவர் கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயிலில் திருவொற்றியூர் வரை பயணம் செய்து வந்துள்ளார்.
புறநகர் ரயிலானது இரவு 7.49 மணிக்கு திருவொற்றியூர் இரயில் நிலையம் வந்தவுடன் இரயிலில் இருந்து இறங்கி பாலம் நோக்கி பெண் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த நபர் தீடீர் என பெண்ணின் உடலை பாலியல் ரீதியாக கையால் தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண் கூச்சலிடவே அங்கிருந்து ஓடிச் சென்று மறைந்துள்ளார்.
இதையும் படிங்க: மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது..

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொருக்குப் பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பெண் கொடுத்த புகாரை அடுத்து உடனடியாக திருவொற்றியூர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் காவல் துணை கண்காணிப்பாளர் கர்ணன், கொருக்குப் பேட்டை காவல் ஆய்வாளர் சசிகலா, ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருவொற்றியூர் இரயில் நிலையம் அருகில் உள்ள CCTV கேமாரக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை பழைய வண்ணாரப் பேட்டை,மை சேர்ந்த டில்லி பாபு, வயது (வயது 34) என தெரியவந்தது. இதனை அடுத்து குற்றவாளியை பேசின் பிரிட்ஜ் இரயில் நிலைய நடைமேடை எண்.5 ல் வைத்து கைது செய்த போலீசார், குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் தெரிவிக்கையில் இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்றாங்க.. கண்டித்த தாத்தா, பாட்டி... 17 வயது சிறுவன் விபரீத முடிவு..!