உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சௌரப் ராஜ்புத். இவர் லண்டனில் வணிகக் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார். இவருக்கும் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் காதல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் இந்தியாவில் வசிக்க விரும்பிய சௌரப், வேலையை ராஜினாமா செய்தார்.
காதல் திருமணம் செய்ததும், அதன் பின் வேலையை விட்டதும் பெற்றோருக்கும் சௌரப் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் உறவுகளோடு சிறு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சௌரப், அதன் பின் தனது மனைவி முஸ்கானுடன் வாடகை வீட்டில் குடியேறினார். இவர்களுக்கு கடந்த 2019ல் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

வாழ்க்கை மிகவும் சந்தோசமாக போய் கொண்டிருந்த சமயம், சௌரபிற்கு அந்த தாங்கிக்கொள்ள முடியாத விஷயம் தெரியவந்தது. சௌரபின் நண்பனான சாஹில் சுக்லாவுக்கும் இடையில் இருந்த திருமணம் தாண்டிய உறவு சௌரபிற்கு தெரிய வந்தது. மனம் நொந்து, கூனிக்குறுகிப்போன சௌரப், விவகாரத்து செய்ய முடிவெடுத்தார்.
ஆனால் தனது மனைவியின் இந்த காரியமும், அவர்களது விவாகரத்தும் தனது குழந்தையின் வாழ்க்கையை சிதைக்கும் என்று எண்ணி அந்த எண்ணத்தை ஒத்திவைத்தார் சௌரப் ராஜ்புத். ஆனால் அதன்பின் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ விரும்பாத சௌரப், மீண்டும் வணிக கடற்படையில் மீண்டும் சேர முடிவு செய்தார். 2023 இல், அவர் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றார்.
இதையும் படிங்க: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!

இந்நிலையில் சௌரப்பின் மகளுக்கு பிப்ரவரி 28ம் தேதி ஆறாவது பிறந்தநாள் வந்தது. மகளின் பிறந்தநாளில் அவளுடன் இருக்க விருப்பப்பட்ட சௌரப், மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை விரும்பாத மனைவி முஸ்கானுன், சாஹிலும் சௌரப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினர். மார்ச் 4ம் தேதி சௌரப்பின் உணவில் முஸ்கான் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்தார்.
அதை சாப்பிட்டுவிட்டு இரவில் அயர்ந்து தூங்கிய சௌரப்பை, முஸ்கானும், சாஹிலும் கத்தியால் குத்தி கொன்றனர். கசாப்புக் கடைக்காரரின் கத்தியால் சவுரப்பின் மார்பில் குத்தி, பின்னர் அவரது தொண்டையை அறுத்தனர். அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, ஒரு டிரம்மில் போட்டு, அதில் சிமெண்ட்டை கொட்டி, தண்ணீரை கலந்து இருக வைத்தனர்.

சரியான நேரத்தில் உடலை அப்புறப்படுத்துவதே அவர்கள் திட்டம். இதனிடையே அக்கம் பக்கத்தினர் சௌரப் குறித்து கேட்டபோது, அவர் மணாலிக்கு டூர் சென்று இருப்பதாக கூறி சமாளித்தார் முஸ்கான். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைக்க, முஸ்கானும் சாஹிலும் சௌரப்பின் தொலைபேசியுடன் மணாலிக்குச் சென்றனர். அங்கே சில போட்டோக்களை எடுத்து அவரது சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.
ஆனால் சௌரப் பல நாட்களாக தங்களது அழைப்பை எடுக்காததால் அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.சௌரப்பின் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் முஸ்கானையும் சாஹில்லையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மனம் உடைந்து, கொடூரமான கொலையை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் உடல் எங்கே இருக்கிறது என தேடிய போலீசார் டிரம்மைக் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த கடினமான சிமெண்டை உடைக்க முடியவில்லை. சௌரப்பின் உடல் துண்டுகளுடன் கூடிய டிரம், பின்னர் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. மீரட் நகர காவல்துறைத் தலைவர் ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், சவுரப் ராஜ்புத் பல நாட்களாகக் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
சந்தேகத்தின் பேரில், அவரது மனைவி முஸ்கானையும் அவரது காதலர் சாஹிலையும் காவலில் எடுத்தோம். விசாரணையின் போது, மார்ச் 4 ஆம் தேதி, சவுரப்பை கத்தியால் கொன்றதாகக் கூறினர். உடலை நறுக்கி, ஒரு டிரம்மில் போட்டு, சிமெண்டால் சீல் வைத்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது..