இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதியை இயற்பியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அறிவியலுக்கு சர் சிவி ராமன் ஆற்றிய பங்களிப்பு, குறிப்பாக இயற்பியலில் ராமன் எபெஃட் உருவாக்கியதற்காக பிப்ரவரி 28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அரசு கொண்டாடுகிறது.

ஒளிபுகும் பொருட்களில் ஒளி பாய்ச்சப்படும்போது அது எவ்வாறு ஊடுருவுகிறது, அவ்வாறு ஒளி சிதறடிக்கப்படுகிறது என்பதை ராமன் எபெஃக்ட் விளக்குகிறது. இந்த கண்டுபிடிப்புக்காக கடந்த 1930ம் ஆண்டு சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியல் மேதையாக சர் சிவி ராமன் விளங்கினார்.
இதையும் படிங்க: பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!
1928ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிதான் தனது கண்டுபிடிப்பு குறித்து சர் சி வி ராமன் உலகிற்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, கடந்த 1986ம் ஆண்டு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்தொடர்பு கவுன்சில்(என்சிஎஸ்டிசி), பிப்ரவரி 28ம் தேதியை அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, 1987ம் ஆண்டு முதல்முறையாக பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. அறிவியல் முன்னேற்றத்தை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருத்துருவை மையமாக வைத்து தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் என்பது, “விக்சித் பாரத்துக்காக அறிவியல் மற்றும் புத்தாக்கத்துக்கு உலகளாவிய தலைமை ஏற்க இந்திய இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற கருத்துரு முன்வைத்து கொண்டாடப்பட்டது.

இந்த கருத்துவின் நோக்கம், இந்தியாவின் இலக்கு என்பது இளைஞர்களின் மனதில் புத்தாக்கத்தை வளர்த்து, அறிவியல் திறனை மேம்படுத்தி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் உலகளவிலாந தலைமைப் பொறுப்புக்கு தகுதிபெறச்செய்தலாகும். இதன் பிரதான நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடக்க இருக்கிறது.
ராமன் விளைவுகளைக் கடந்து இயற்பியல், அறிவியல் துறையில் சர் சிவி ராமன் பங்களிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. அவரின் ஆராய்ச்சியான ஒளிச்சிதறள், எக்ஸ்ரே கதிர்கள், கடலின் நிறம் போன்றவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இலக்கை வேறு பரிமானத்துக்கு எடுத்துச் செல்லும்.

இந்தியாவின் சிறிய கிராமத்தில் பிறந்த சர் சிவி ராமன் நோபல் பரிசு பெற்று, தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். இந்திய அறிவியல் பாரம்பரியத்தையும், அறிவியலில் ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றிலும் தொழில்நுட்பத்தில் ஒளிமயமான எதிர்காலம் தேவை என்பதை தேசிய அறிவியல் தினம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்..! அதிர வைத்த மோடியின் திடீர் அறிக்கை..!