மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் தமிழில் எழுதுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது, பிராந்திய மொழிகளில் தேர்வு எழுவதும் உயர்ந்துள்ளது, அதேநேரம் ஆங்கிலத்துக்கான தேர்வு சதவீத அடிப்படையில் குறைந்து வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. “மணிகன்ட்ரோல்”(Moneycontrol) செய்தித்தளம் நடத்திய ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கை சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் பிராந்திய மொழிகளைத்தான் அதிகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மருத்துவத் தேர்வுகளை தேர்வு செய்து எழுதியோரின் எண்ணி்க்கை 24 லட்சமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களே..! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
சமீபத்தில் ராணிப்பேட்டைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “தமிழலில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளைக் கொண்டுவர வேண்டும்” எனக் கேட்டிருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளின் தரவுகளைப் ஆய்வு செய்தபோது, மாணவர்கள் தமிழைத் தேர்வு செய்து நீட் தேர்வு எழுதுவது அதிகரித்துள்ளது, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுவது குறைந்துள்ளது.

நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சியிடம் இருந்து புள்ளிவிவரங்களை பெற்று ஆய்வு செய்கையில், தமிழ் உள்ளிட்ட சில பிராந்திய மொழிகள் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் ஆர்வமாக தேர்வு எழுத தேர்வு செய்யப்படுகிறது. அதேபோல நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது.
பிராந்திய மொழிகளைத் தேர்வு செய்து அதில் நீட் தேர்வை எழுதவும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள், அந்த தேர்வும் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2019ல் இந்தி மொழியை 1,79,857 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அது 2024ம் ஆண்டில் இரு மடங்காகி, 3.57 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதேபோல தமிழலில் நீட் தேர்வு எழுதுவோர் கடந்த 2020ம் ஆண்டில் 17ஆயிரத்து 101 மாணவர்களாக இருந்தனர். ஆனால், இது 2024ம் ஆண்டில் 36ஆயிரத்து 333 பேர் தமிழலில் தேர்வு எழுதியிருந்தனர். இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
ஆனால், ஆங்கிலம்தான் நீட் தேர்வில் பிரதான மொழியாகி இருக்கிறது. ஆனால், இதன் சதவீதம் என்பது கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டில் 79.3 சதவீதம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் 2024ல் 78.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குஜராத் மொழியைத் தேர்ந்தெடுத்து மருத்துவத் தேர்வு எழுதுவதும் குறைந்துள்ளது. 2019ல் 59,395 மாணவர்கள் குஜராத்தியில் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் 58,836 ஆகக் குறைந்துள்ளது. ஒடியா மொழியில் நீட் தேர்வு எழுதுவதும் குறைந்துள்ளது, 2019ல் 31,490 மாணவர்கள் ஒடியாவில் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் 1,313 ஆகக் குறைந்துள்ளது.
அதேசமயம், வங்காள மொழியில் 2019ல் 4750 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 2024ல் 48,265 பேர் தேர்வு எழுதினர். மராத்தியில் 2019ல் 31,239 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அது 2024ல் 1759 ஆகக் குறைந்துவிட்டது. தமிழலில் 1017 மாணவர்களாக இருந்து 2024ல் 36,333 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2019ம் ஆண்டு பிராந்திய மொழியில் 3.14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் இது 5.13 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...