நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சுமடைந்துள்ள நிலையில் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

காத்மாண்டுவில் 65 கிலோ மீட்டர் கிழக்கில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்திலுள்ள கோடாரி நெடுஞ்சாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காத்மாண்டு மிகவும் சுறுசுறுப்பான மண்டலங்களில் ஒன்றாக திகழும் நிலையில் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: உத்தரகண்ட்டை அதிர வைத்த நிலநடுக்கம்… கதறித் துடித்து ஓடிய மக்கள்..!

ஏற்கனவே நேபாளத்தில் 2015 ஆம் ஆண்டு 7.1 என்ற அளவில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 லட்ச ரூபாய்க்கும் மேலான கட்டுமானங்கள் அப்போது சேதமாகி இருந்த நிலையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...!