மதுரையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டது. பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சாராயம் போதையை தாண்டி, மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன. இவை வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக் கூடங்கள் அருகே அதிகளவில் விற்கப்படுகிறது. சாலையில் ஒருவரை சர்வ சாதாரணமாக வெட்டி சாய்க்க முடிகிறது. காவலரையே எரித்து கொலை செய்ய முடிகிறது. இதுவரை கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. திமுக கொடி கட்டிய காரிலிருந்து இறங்கி வந்து பெண்கள் பயணித்த காரை வழிமறித்து குற்றம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் போராடுகிறார்? மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அதனால், பாஜக போராட்டம் நடத்தக் கூடாது. நாங்கள்தான் போராட வேண்டும். ரூ.450 கோடி கழிவறை ஊழல் நடைபெற்றுள்ளது. அது குறித்து யாரும் பேசவில்லை. திமுகவுக்கு திடீரென்றுதான் மொழி மீது பற்று வரும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு தயங்குகிறது. மத்திய அரசுக்குதான் அந்த அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்கள்.

பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. மாநில உரிமை பற்றி பேசும் தமிழக அரசால் சாதிவாரிக் கணக்கெடுக்க முடியவில்லை. முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் டாஸ்மாக் ஊழல் நடந்ததாக கூறினார்கள். ஒரு வாரத்தில் அது ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது. விசாரணை முடிவதற்குள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும். தமிழகத்தில் மது வணிகத்தில் உற்பத்தியாளரும் விற்பனையாளரும் ஒரே ஆளாக இருக்கிறார்கள்" என்று சீமான் கூறினார்.
இதையும் படிங்க: கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!!
இதையும் படிங்க: தைரியம் இருந்தா என்னை கைது பண்ணுங்க... ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!