ஜனசேனா கட்சித் தலைவராகவும், ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் உள்ளவர் பவன் கல்யாண். அவரின் 3வது மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார். 8 வயதான மகன், மார்க் ஷங்கர் அவருடன் தங்கி சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மார்க் ஷங்கர், பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தான்.மார்க் ஷங்கர் கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டது. கரும் புகையை அதிகளவில் சுவாசித்ததால் அவனது நுரையிரலும் பாதிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தினர் அவனை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் பவன் கல்யாணுக்கு கிடைத்தது. ஆனால், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பவன்கல்யாண், சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் விரைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார். மார்க் சங்கர் படித்து வந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அதேபோல், அவர் நுரையீரலுக்குள் புகை புகுந்ததால் அவதிப்பட்டார். மார்க் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தற்போது அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் தீ விபத்தில் சிக்கி உள்ள நிலையில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு கட்சித் தலைவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அந்த நடிகரெல்லாம் துணை முதல்வரா..? நினைக்கவே சங்கடம்.. பிரகாஷ் ராஜ் கடும் கோபம்..!

ஆனால் வாக்குறுதி அளித்தப்படி பழங்குடியினருடன் செல்வதாக பவன் கல்யாண் கூறினார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் இன்று தொடங்க இருந்த வளர்ச்சி திட்டங்களை முடித்துவிட்டு, மன்யத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தை வர உள்ளார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தது. அதன்படி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சிங்கப்பூர் சென்றடைந்தார்.
சிங்கப்பூர் சென்ற பவன் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனை சந்தித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் மகன் மார்க் ஷங்கர் சீராக குணமடைந்து வருவதாக, அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்தின்போது புகை உடலுக்குள் சென்றதால், நுரையீரல் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது. இன்று காலை எமர்ஜென்சி வார்டில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டாக்டர்கள் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேற்கொண்ட பரிசோதனை அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!