மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ''கொள்கை வழியில் நடக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் உருவாக்க வேண்டும் என தலைவர் விஜயிடம் சேர்ந்து உரையாடும்போது அவர் எந்த அளவுக்கு கொள்கை ரீதியில் தன்னை உள்வாங்கி இருக்கிறார் என்கிற புரிதலோடு என்னை தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பெரியாரிசம் பேசுவார்கள், சமூக சீர்திருத்தம் பேசுவார்கள். ஆனால் ஜாதி அரசியலைப் பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகக் கொண்டு ஆட்சியில் முக்கிய கொள்கையாக ஊழலை உருவாக்கிய போலி கபடதாரிகள். பெரியாரையும், சமூக பெரியாரின் சமூக சீர்திருத்தத்தையும் முன் நிறுத்திய இன்றைய அரசியலை நடத்தும் கபடதாரிகளின் கைகளில், ஊழல்வாதிகளின் கைகளில் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: சொதப்பிய தவெக? உணவு, தண்ணீர் இல்லை... 3 மணி நேரம் பசியுடன் வாடிய தொண்டர்கள்...!

மக்களிடம் உண்மையான அக்கற்றை, உண்மையான உணர்வு பெற்ற தலைவர் நம் தலைவர் விஜய். நான் பார்த்த பல்வேறு அனுபவங்கள் உள்ளது. அந்த உணர்வு தமிழக வெற்றி கழகத்தில் இருக்கிறது. பெரியாரையும், அம்பேத்கரையும் இணைத்து சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக்கூடிய ஒரு இயக்கமாக பயணித்து கொண்டிருக்கிறது தவெக. சினிமாதுறையில் பல்வேறு தொழில்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமாக இன்றைய அரசு இருக்கிறது.
அதற்கு ஒரே மாற்றி தமிழக வெற்றி கழகம். அதற்கு ஒரே சிந்தனை உள்ள தலைவர் விஜய் அவர்கள். தொலைக்காட்சி வாதங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நடிகர் அவருக்கு கொள்கை தெரியுமா? என்று விமர்சனத்தை இன்றைக்கு வரைக்கும் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் இதுவரை என்ன மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்? 2021ல் திமுக பிரச்சாரம் செய்தபோது தமிழகத்தின் கடனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

மாநிலத்தில் அதிமுக 5 லட்சம் கோடியை கடனாக விட்டுச் சென்றது என்றார்கள். விட்டு சென்றது 15 வருடங்களாக 5 லட்சம் கோடி தான் தமிழக அரசு கடனாக வாங்கியது. இன்றைக்கு நான்கு வருடத்தில் திமுக அரசு 4 லட்சம் கோடி வாங்கின் இருக்கிறது. இன்றைக்கு 9 லட்சம் கோடியாக கடன் சென்று கொண்டிருக்கிறது. பாலிசி ஃபெயிலியர். கொள்கைகளைப் பேசி, மேடைகளில் பேசி மக்களிடம் கவர்ச்சி ஏற்படுத்தி, அந்த கவர்ச்சி மூலம் ஆட்சி ஏற்படுத்தி, அந்த ஆட்சி மூலம் ஊழலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் செய்யும் அரசாங்கம் தான் இன்று இருந்து கொண்டிருக்கிறது. மேம்பட்ட நாடுகளில் ஊழல் எப்படி இருக்கும் என்றால், வளர்ச்சி, பொருளாதாரத்தை உருவாக்குவார்கள். அதில் உழல் இருக்கும். இங்கே கடனை உருவாக்கி அதில் ஊழல் செய்கிறார்கள். இதுதான் பிரச்சனை. ஊழல் செய்கிறீர்கள். ஒரு பொருளாதாரத்தை உருவாக்கி அதில், ஊழல் செய்தால் கூட பரவாயில்லை. இங்கே கடனை உருவாக்கி நமது தலையில் கடனாக ஒன்பது லட்சம் கோடி இருக்கிறது. நாலு வருஷத்தில் நான்கு லட்சம் கோடி.

10 லட்சம் கொடியை கொண்டு வந்து விட்டோம் என்கிறார்கள். எல்லாமே செட்டிங். அவர்களுக்கு செட்டிங் செய்வதை தவிர வேறு எதுவுமே தெரியாது'' என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: Get Out ... பிரசாந்த் கிஷோர் முன் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்த விஜய்...!