தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. மேடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் வந்தனர். இந்த விழாவில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள். அதன் பிறகு சில முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட இருக்கிறார். இந்த நிலையில் ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் அதிரடியாக Get out என்ற கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்துடன் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிவித்துள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நம்முடைய வெற்றித் தலைவர் தன்னுடைய போர்க்கரங்களால் திரைக்கு மறைவில் கபட நாடகம் ஆடக்கூடியவர்களை விரட்டி அடிக்க, ஒருவர் பாட்டுப்பாட மற்றொருவர் அதற்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கக்கூடிய கபடதாரிகள் அனைவரையும் இருவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு கெட் அவுட் என்று சொல்லி பொற்கரங்களால் முதல் கையெழுத்து போடுகிறார். நம்முடைய தலைவரை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள் ஹஷ்டேக் கெட் வுட் என்று அந்த பதாகையில் சிறப்பு கையெழுத்தை பதிவு செய்கிறார்கள். இனி வீட்டிலும் நாட்டிலும் உங்களுக்கு வேலை இல்லை கெட் அவுட் என்று உறக்கச் சொல்வோம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது
நுழைவு வாயிலில் ஏராளமான பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு பாஸ் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு இலைக்கு ரூ.3000... 21 உணவு வகைகள்… தவெக நிர்வாகிகளுக்கு படையல்..! லிஸ்டில் அப்படி என்னதான் இருக்கு..?