கிலன் பார் சின்ட்ரோம் என்றால் என்ன
கிலன் பார் சின்ட்ரோம் என்பது மனிதர்களுக்கு அரிதாக ஏற்படும் நரம்பு கோளாறாகும், இதில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கி உடலை பலவீனப்படுத்தி, உடல் முழுவதையும் முடக்குகிறது. ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதால், இதற்கு சிகிச்சை பெற உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கிலன் பாரே சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்புகள் முடக்கப்பட்டு, தசைப்பகுதியில் வலியும், காய்ச்சலும் அதிகரிக்கும். தசைகள் பலவீனமடையும். கை, கால்கள் மரத்துப் போகும். சாப்பிடுவதற்கும், மூச்சுவிடுவதற்கும் சிரமமாக இருக்கும்.

புனேயில் இதுவரை 73 பேர் கிலன் பார் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 47 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள். இதில் 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் அவசரசிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...
புனே நகரில் திடீரென ஜிபிஎஸ் நோய் மக்கள் மத்தியில் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்தும், அதைத் தடுக்க நடவடிக்கை குறித்தும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அதிவிரைவு மருத்துவக் குழுவையும் புனே நகர நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த குழுவின் முயற்சியால் இந்த வாரத்தில் மட்டும் 24 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோய் மிகவும் அரிதானதாகும். இந்த நோயால் ஆண்கள் அதிகம்பாதிக்கப்படுவார்கள், அனைத்து வயதினரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

புனேயில் கிலன் பார் சின்ட்ரோம் நோய் பரவல் அதிகரித்து வருகிறது உண்மைதான், எச்சரிக்கையாக இருக்க மக்களிடம் கேட்டுள்ளோம். ஆனால், இது பெருந்தொற்று போல் இருக்காது எனசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாரஷ்டிரா மாநில சுகாதாரத்துறையினர், அதிவிரைவு மருத்துவக் குழுவினர், புனே மாநகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி சுகாதார அதிகாரிகள் இணைந்து இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை பரிசோதித்து வருகிறார்கள். இதுவரை 7200 வீடுகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனே மாநகராட்சி எல்லையில் மட்டும் 1,943 வீடுகள், சின்சாவத்பகுதியில் 1750, கிராமப்பகுதியில் 3522 வீடுகளில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலவசங்கள் தர பணம் இருக்கு!!! நீதிபதிகளுக்கு பணமில்லையா?? உச்ச நீதிமன்றம் விளாசல்