பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளது. மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், 818 ரூபாய் 50 காசாக இருந்த இருந்த சிலிண்டர் விலை 868 ரூபாய் 50 காசாக உயரும். இந்த விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
இதையும் படிங்க: வாருங்கள்..! கேள்வி கேளுங்கள்..! மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி அழைப்பு..!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 43 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விலை உயர்வு நாளை (ஏப்.08) காலை முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை விலை உயர்வு விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரும் மற்றொரு பரிசு என காங்கிரஸ் எம்பியும், எதிக்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சனம் செய்துதுள்ளார். இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இறுதியாக வரி விதிப்புக்கு தக்க பதிலடியை மோடி கொடுத்துவிட்டார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றொரு பரிசாக அரசின் இந்த கொள்ளை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!