மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 2024 ஆம் ஆண்டு தனது அமெரிக்க பயணத்தின் போது டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தி இருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை ராகுல்காந்தி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: திருமணக் குதிரை நடனமாடும் போது பந்தயக் குதிரை ஓடும்… பாஜகவை பல்ஸ் பார்க்கும் ராகுல் காந்தி..!
இதையும் படிங்க: மாபெரும் வன்முறை..! இந்துக்கள் தாக்கப்பட்டால் இனிக்கிறதா..? வெட்கக்கேடான ராகுலின் மௌனம்..!