ஜம்மு காஷ்மீர் பாஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தை அடுத்து ஜம்மு- காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். இந்த தாக்குதல் எப்படி நடந்தேறியது?, எத்தனை பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கொடுத்துள்ளனர். ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேரி மற்றும் கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் திருப்பதி ஆகியோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து காஷ்மீரில் தற்போது நிலவக்கூடிய பாதுகாப்பு சூழல், அங்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, கவுண்டர் டெரரிஸ்ட் ஆபரேஷன்ஸ் எந்த அளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 பேரின் நிலை என்ன? - வெளியானது பரபரப்பு தகவல்..!
முழு விவரங்களையும் கேட்டறிந்த ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக விரைந்து செல்ல ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி இருக்கிறார். அதாவது கவுண்டர் டெரரிஸ்ட் ஆபரேஷனைத் துரிதப்படுத்தவும், தீவிரப்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் படைகள் உஷார் நிலையில் இருக்கவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும் ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தேடுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கூடுதல் படைகளை ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ஒவ்வொரு அங்குலத்திற்கும் தேடும் பணி தீவிரப்படுத்துள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; விமான நிறுவனங்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு!