சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவை நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அறையிலே எடப்பாடி பழனிசாமி தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. அதிமுக சார்பில் ஏற்கனவே இதற்கான அந்த கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீர்மானத்தின் மீது விவாதம் இன்று நடைபெற இருக்கின்றது.

வாக்கெடுப்பும் நடைபெற இருக்கின்றது. அதாவது சபாநாயகர் பொறுப்பில் அப்பாவு தொடர வேண்டுமா வேண்டாமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறும். இதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் திமுக மற்றும் அதனுடைய கூட்டணியினர் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காரணத்தினால் நிச்சயம் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இருப்பினும், அதிமுகவினர் அந்த கோரிக்கையை கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அந்த வாக்கெடுப்பு நடைபெற்றால் அந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலே எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேளாண் அறிக்கை இல்ல, வெத்துவேட்டு அறிக்கை... திமுகவை சாடிய ஓ.பி.எஸ்..!

அதாவது குரல் வாக்கெடுப்பு என்று சொன்னால் ஆம் என்று சொல்வார்கள் அதேபோல எண்ணிக் கணித்தல் முறை இரண்டாவது டிவிஷன் மெத்தட் என்று சொல்வார்கள். அதிலே எழுந்து நிற்க வேண்டும், இந்த தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்க வேண்டும், விருப்பமில்லாதவர்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். எனவே அது போன்ற நேரங்களில் குழப்பத்தோடு செயல்படாமல் தெளிவோடு செயல்படுவதற்கும், அதேபோல வாக்குவாதங்கள் ஏற்பட்டால் என்னென்ன விஷயங்களை சொல்லி நாம் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்றாவது நாளாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் செங்கோட்டைனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே வெளிப்படையாக மோதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அவர் இன்றும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஆனால் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டை அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக அவர் தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி - பதில் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கேள்வி, பதில் நடவடிக்கையை புறக்கணித்தார்.

தொடர்ந்து சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: சபாநாயகரை தனியே சந்தித்த செங்கோட்டையன்... இபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தலா?