தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வக்ஃபு சட்டத்தை எதிர்த்து சைதாப்பேட்டையில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மோடி அரசு, முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. நரேந்திர மோடி பிரதமராக வந்தபின், என்ஆர்சி சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, மாநில உரிமை பறிக்கப்பட்டது. உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது மத்திய அரசு வக்ஃபு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..! காங்கிரஸ் எம்.பி ஓவைசி தாக்கல்..!
வக்ஃபு திருத்தச் சட்டத்தை நிச்சயமாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசைப் பார்த்து முஸ்லிம்கள் அல்லாதவோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முஸ்லிம்களை மட்டும்தான் பாஜக குறிவைக்கிறது, தாக்குகிறது என்று நினைக்காதீர்கள். விரைவில் பாஜகவின் கவனம் சீக்கியர்கள், ஜைனர்கள், பெளத்தர்கள் பக்கம் திரும்பும் அவர்களுக்கும் இதே நிலை வரலாம்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக கோயிலுக்கு வழங்கவோ அல்லது பணத்தை நன்கொடையாக அளிக்கலாம். ஆனால், புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் மசூதிக்கு நிலத்தையோ அல்லது பணத்தையோ தானமாக வழங்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முஸ்லிமாகா இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறை முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் விதிக்கப்படுகிறது. வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதோர்கள் நியமிக்கப்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டம் 26 பிரிவை மீறுவதாகும்.

அனைத்து இந்துக் கோயில்களிலும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. முஸ்லிம் யாரானும் ஒருவர், இந்து கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக நியமிக்க முடியுமா. ஆனால் புதிய வக்ஃபு சட்டத்தில் வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினர்களாக நியமிக்கபட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை மாவட்ட தலைநகரங்களை அதிர விடப்போகும் தவெக... விஜய் எடுத்த அதிரடி முடிவு..!