தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே இவ்வுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மொழிகளில் கல்வி பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் அல்லது பள்ளிக்குச் செல்லாமல் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்கள், முன்னுரிமைக்கு தகுதியில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றவர்கள் மட்டுமே உரிய சான்றிதழ்கள் அடிப்படையில் இந்த சலுகைக்குத் தகுதியுள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனம் மூடப்பட்டிருந்தால் மாவட்ட கல்வி அலுவலர்கள் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற புதிய விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வி தமிழில் இல்லை..! அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மா.சு. பதிலடி..!
இதையும் படிங்க: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!