கர்நாடக மாநிலம் பெங்களூரு, கலாசிபால்யா நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் சதீஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது. தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்தார். தனது கடைக்குட்டி மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கடந்த 2023ல் அதேபகுதியில் செயல்படும் சிறுவர்களுக்கான பள்ளியில் சேர்க்க சென்றார். அங்கே அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் 25 வயதான ஸ்ரீதேவி ருடகி உடன் சதீஸுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி கொண்டனர். இருவரும் தங்களது மொபைல் எண்களை பறிமாறிக் கொண்டனர்.

முதலில் தனது மகள், பள்ளியில் என்ன செய்கிறாள்..? பள்ளிக்கு என்ன தேவை.? என்பது போல ஆரம்பித்த அவர்களது பேச்சு, நாளடையில் வேறு விதமாக வளர்ந்தது. அடிக்கடி போன் செய்து பேசிக் கொள்வது, கொஞ்சிக் கொள்வது, வீடியோ காலில் மணிக்கணக்கான பேசுவது என இவர்களது நட்பு வளர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இவர்களது நட்பு வளர்ந்து காதலானது. தனது காதல் விவகாரம் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதற்காக சதிஷ் தனி செல்போன், தனி சிம் கார்டு என வாங்கி உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களது காதல் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. வீடியோ காலில் ஆபாச சேட்டிங் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் பட்டாசு ஆலையில் தீ விபத்து..! 18 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்..!

இவ்வாறன சூழலில் தான் சதீஷ் தலையில் இடி விழுந்ததை போல இந்த ரிலேஷன்ஷிப் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதேவி ருடகியின் சுயரூபம் சதீஷ்க்கு தெரியவந்தது. தொழிலதிபரான சதீஷ் இடம் இருந்து பணம் பறிப்பதையே ஸ்ரீதேவி குறியாக கொண்டு இருந்தார். தனது நண்பர்களான கணேஷ் காலே (38), சாகர் (28) ஆகியோரையும் தனக்கு துணையாக பயன்படுத்தினாள் ஸ்ரீதேவி. முதலில் 4 லட்ச ரூபாய் கேட்டு ஸ்ரீதேவி மிரட்டி உள்ளார். தரவில்லை என்றால் இருவருக்கும் இடையிலான அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.

பயந்து போன சதிஷோ பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் ஸ்ரீதேவி மேலும் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். பணம் தரமுடியாது என்றால் மனைவியை பிரிந்துவிட்டு தன்னுடன் லிவிங்-கில் இருந்துகொள் என்று மிரட்டி உள்ளார். நாளாக நாளாக ஸ்ரீதேவியின் மிரட்டல் ஜாஸ்தி ஆனது. சதிஷின் குடும்பத்தினர் இல்லாதபோது, ருடகி அவரது வீட்டிற்குச் சென்று கூடுதலாக ரூ.50,000 எடுத்துச் சென்றார்.
இதற்கிடையே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது சொந்த ஊரான குஜராத்திற்கு சென்று விடலாம் என சதீஷ் நினைத்துள்ளார். ஆனால் தனது குழந்தைக்கு இடமாற்றச் சான்றிதழ் வேண்டும் என்பதால் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதேவியின் நண்பர்கள் கணேஷ் காலே, சாகர் ஆகியோர் சதீஷை வழிமறித்து மிரட்டி உள்ளனர்.

ஸ்ரீதேவியும் சதீஷ்க்கு கால் செய்து தனக்கு மல்லேஸ்வரம் துணைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஏசிபி-யை தெரியும் என்றும், இத்தோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றால் ஏசிபிக்கு 5 லட்சமும் கணேஷ் காலே, சாகர் ஆகியோருக்கு தலா 1 லட்ச ரூபாயும், தனக்கு 8 லட்ச ரூபாயும் தர வேண்டும் என மிரட்டி உள்ளார். பணம் தரவிட்டால் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்துவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார் ஸ்ரீதேவி.

தனது நற்பெயர் மற்றும் குடும்பத்தின் நலனுக்கு பயந்து சதீஷ், ஆரம்பத்தில் ரூ.1.9 லட்சம் கொடுத்தார். ஆனாலும் மிரட்டல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி மிரட்டி பணம் பறிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சதிஷ் காவல்துறை உதவியை நாடினார். ஸ்ரீதேவி குறித்து சதீஷ் அளித்த புகாரின் போலீசார் விரைவாக செயல்பட்ட போலீசார் ஆசிரியை ஸ்ரீதேவி ருடகி, கணேஷ் மற்றும் சாகர் ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையில், மல்லேஸ்வரம் துணைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஏசிபி ஒருவருடன் ருடகி தனக்கு தொடர்பு இருப்பதாக பொய் சொல்லி, சதிஷை மிரட்டி, சம்மதிக்க வைக்க முயன்றது தெரியவந்தது. இருப்பினும், இந்த வழக்கில் ஏசிபிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசார் தெளிவுபடுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி விபத்து - ஒரு வயது குழந்தை பலி