பொய்யான புகாரில், போக்சோ நீதிமன்றம் விதித்த 10 வருட சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது தொடர்பான சில புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு அளித்த புகாரில் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் மூத்த சகோதரியை, குமார் காதலித்து வந்ததாகவும், பின்னர் வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது.
இந்த திருமணத்திற்கு குமார் இடையூறாக இருப்பார் என கருதி தங்கையை வைத்து பொய்யாக பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் இல்லை என மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, போக்சோ சட்டத்தின் கீழ் குமார் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொவவைத்தார்.. செலுத்தி இருந்தால் அந்த தொகைகளை திரும்ப அவருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலையில் ஆயுள் தண்டனை: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு; உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது