தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பெரும்பாலான இடங்களில் அதிகமாகவே இருந்து வருகிறது. அதேபோல் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து பொது மக்களின் தாகத்தை தணிக்க தவெக சார்பில் மதுரையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி மாணவரணி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர் தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் மோர், தண்ணீர் பழம் உள்ளிட்டவற்றை வழங்கினர். வெயிலின் தாக்கத்தில் இருந்த பொது மக்கள் மகிழ்ச்சியோடு மோர் மற்றும் தண்ணீர் பழம் ஆகியவற்றை வாங்கி உட்கொண்டு பலன் அடைந்தனர்.
இதையும் படிங்க: கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்.. காட்டை விட்டு வெளியேறி மர நிழலில் அமர்ந்திருக்கும் புள்ளி மான்கள்.

இந்த நிகழ்வானது தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், இணை அமைப்பாளர் ஆர்.வில்லு விக்கி, யோகேஷ் கண்ணன், துணை அமைப்பாளர் திருப்பதி, இன்பா, மணிகண்டன் ஆகியோர் முன்னேற்பாடுகள் மூலம் நடத்தப்பட்டது.

த.வெ.க. ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய், த.வெ.க. தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார். கோடை காலம் தொடங்கியுள்ளதால், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் மோர், தண்ணீர் பழம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!