உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயல்வது, ரஷ்யாவிற்கு எதிரானதாகக் கருதப்படுவது, மற்றும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது போன்ற காரணங்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உருவானது. ரஷ்யாவின் இரண்டு நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்ட போதிலும் மூன்றாவது நிபந்தனையை ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம் கீரணி மக்களை சொந்த இடங்களிலேயே புலம்பெயர வைத்துள்ளது. எத்தனையோ உயிரிழப்புகள், எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் போர் பதற்றம் தனியாமல் இருந்தது. இதனையே கூரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா சபையில் பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தின. ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மன்றத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் செத்துப்போவார்... அதிர்ச்சி கிளப்பும் ஜெலென்ஸ்கி..!

அப்போது, இந்தியா நடுநிலை விகிப்பதாக அறிவித்தது.,வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. பிரச்சினையை இரு நாடுகளும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு கண்டனத் தீர்மானம் உதவாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனை தற்காலிகமாக ஐநா சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மிக திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும் என்றும் இது ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கும், மக்களால் நம்பப்படும் ஒரு திறமையான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உதவும் என கூறியுள்ளார்

தேர்தல் நடத்தப்படாத நிலையில் உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யா அமைதியை நோக்கிய நகர்வுகளை தடுக்கும் முயற்சிப்பதாகவும் போரை தொடர முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1 மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய புடின்... டிரம்பை விரக்தியாக்க ரஷ்ய அதிபரின் ராஜதந்திரம்..?