இந்தியாவில் உள்ள 17க்கும் மேற்பட்ட வங்கிகளில், ரூ.9000 கோடிக்கு மேலாக கடன் வாங்கிவிட்டு 2016 ஆம் ஆண்டு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த பதிவு கன்னடர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விஜய் மல்லையா ஒரு கன்னடர்.
இதையும் படிங்க: மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் புத்தாண்டு கொண்டு வரட்டும்..! பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

ஒரு கன்னடர் கன்னட புத்தாண்டு வாழ்த்து சொல்லாமல் தமிழ் புத்தாண்டுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி உள்ளது வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கன்னடர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த பலர் கமெண்ட் செக்ஷனில் விஜய் மல்லையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏன் உன்னுடைய சொந்த தாய் மொழியான கன்னட புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் தமிழ் மட்டும் இனிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனிடையே, லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா தற்போது அங்கு ஏராளமான தமிழர்களோடு பழகி வருவதாக சொல்லப்படும் நிலையில், அவரது தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி கன்னடர்களை கோபமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: அன்பும் அமைதியும் பெருகும் ஆண்டாக அமையட்டும்! அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!