காக்கிநாடா துறைமுக வழக்கில் சிஐடி முன் ஆஜரானார் முன்னாள் எம்பியும், முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயசாய் ரெட்டி. முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் வி. விஜயசாய் ரெட்டி, ஆந்திரப் பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முன் புதன்கிழமை விசாரணைக்காக ஆஜரானார்.
காக்கிநாடா துறைமுக வழக்கில் சிஐடி நோட்டீஸ் பிறப்பித்ததையடுத்து, காலை 11 மணிக்கு அவர் அலுவலகத்தை சென்றடைந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து (YSRCP) ஜனவரியில் விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த ரெட்டியின் வழக்கறிஞருக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது.

காக்கிநாடா துறைமுக லிமிடெட் (KSPL) முன்னாள் தலைவர் கர்நாடி வெங்கடேஸ்வர ராவ் (கேவி ராவ்) புகாரின் பேரில் சிஐடி விசாரணை தொடங்கியது. ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியில், KSPL மற்றும் காக்கிநாடா SEZ-இல் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மிரட்டி வாங்கப்பட்டதாக ராவ் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..?
காக்கிநாடா துறைமுகத்தில் 40% பங்கு (ரூ.2,500 கோடி) ரூ.494 கோடிக்கும், SEZ-இல் 49% (ரூ.400 கோடி) ரூ.12 கோடிக்கும் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கப்பட்டதாக அவர் கூறுகினார்.
விஜய் சாய் ரெட்டி, மற்றும் அவர்களது உறவினர்களான ஒய்வி சுப்பா ரெட்டியின் மகன் விக்ராந்த் ரெட்டி, ஆரோபிந்தோ பார்மாவின் பெனகா சரத்சந்திர ரெட்டி உள்ளிட்டோர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் (506, 384, 420, 109, 467, 120(b), 34) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விக்ராந்த் ரெட்டி மற்றும் கூட்டாளிகள், பொய் வழக்குகள் மற்றும் சிறை அச்சுறுத்தல்களால் பங்குகளை பறித்ததாக விசாரணை அதிகாரி ராவ் மேலும் குற்றம் சாட்டியுள்ளார் .
ஜனவரியில் அமலாக்க இயக்குநரகம் (ED) விஜய் சாய்ரெட்டியை விசாரித்தது. ED-யும் ராவின் புகாரின் அடிப்படையில் ECIR பதிவு செய்தது. விசாரணையின் போது குற்றச்சாட்டுகளை மறுத்த ரெட்டி, டிசம்பர் 2024ல் முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் ராவ் மீது அவதூறு வழக்கு தொடருவதாக அறிவித்தார்.
சந்திரபாபு நாயுடு, ராவை பயன்படுத்தி தனது பெயரை கெடுக்க சதி செய்வதாகவும், பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கும் ராவ் நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஏன் புகார் அளித்தார் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த முக்கிய வழக்கு, ஆந்திர அரசியல் மற்றும் பெரிய நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராயப்பேட்டை மெட்ரோ ரயில் பணிகளில் சுணக்கம்.. முட்டுக்கட்டை போட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் சாடல்..!