மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
மேலும் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 73 வழக்குகள் விசாரணை நேற்று தொடங்கிய நிலையில் சரமாரியான கேள்விகளை முவைத்த நீதிபதிகள், மத்திய அரசின் பதில் திருப்திகரமாக இல்லை என கூறியதுடன் நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வக்பு திருத்த சட்டப்படி எந்த நில வகைப்படுத்தலும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்தனர். வக்ஃபு திருத்த புதிய சட்டப்படி உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐந்து ரிட் மனுக்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, வக்பு வாரிய உறுப்பினர் நியமனம் செய்ய மாட்டோம் என ஒன்றிய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார்.
இதையும் படிங்க: இது வக்ஃபு வாரிய சொத்து... ஊரை காலி செய்யுங்கள்: தமிழக கிராமத்துக்கு வந்த நோட்டீஸால் பரபரப்பு..!
நிலத்தை வகைப்படுத்த மாட்டோம் என ஒன்றிய அரசு தரப்பு உத்தரவாதம் அளித்ததையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிய விடிய விவாதம்.. வக்பு திருத்த மசோதா நிறைவேறியது.. ஆதரவு 288, எதிர்ப்பு 232!