கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.கங்கை அமரன் தற்போது தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.
2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்; ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது. அதனால் தொடர்ந்து திரைத்துறையில் தனது கவனத்தை செலுத்திவந்தார் கங்கை அமரன் .இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் மீது அமெரிக்கர்களுக்கு இவ்வளவு பக்தியா ..நமசிவாய மந்திரத்தை பாடியவாறு சாமி தரிசனம் ..!
ஏற்கனவே இளையராஜாவின் மகளும் தங்களது தங்கையான பாடகி பவதாரணியை பறிக்கொடுத்த நிலையில் தற்போது தங்கள் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் வெங்கட் பிரபு,பிரேம்ஜி உட்பட ராஜா குடும்பத்தினர்.
இதையும் படிங்க: 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து'நாட்டுப்புற பாடகியின் பரிதாப நிலை ..கலங்க வைக்கும் செல்வி ..!