அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா, சமத்துவ நாள் விழாவாக இன்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் மண்டபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்றுப்பேசிய துரைமுருகன், ''அம்பேத்கர் அனைத்து சமூக மக்களுக்காகவும் பாடுபட்டவர். நாடு விடுதலை அடைந்து முதன்முதலாக ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைக்கும்போது மத்திய சட்ட அமைச்சராக அண்ணல் அம்பேத்கரை அமர்த்தினார். படிக்கும் காலத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு ஊருக்கு வரும்பொழுது தாழ்த்தப்பட்டவர் என்பதை அறிந்த மாட்டு வண்டி ஓட்டுநர் அவரை வண்டியில் இருந்து தள்ளி விட்டார். இதுபோன்று பல்வேறு அவமானங்களை சந்தித்து இந்த நிலைக்கு அவர் உயர்ந்தார்.

ஒருமுறை பம்பாய் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு தலைவரையும் சென்று சந்திப்பதற்காக நேரம் கேட்டனர். முதலில் காந்தியை சந்தித்து நேரம் கேட்டார்கள் 7:00 மணிக்கு என்னை வந்து பாருங்கள் என்று அவர் கூறினார். ஜின்னாவிற்கு கேட்டனர். அவர் எட்டு மணிக்கு வரும்படி சொன்னார். அடுத்து அம்பேத்கரிடம் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் 10 மணிக்கு நேரம் ஒதுக்கினார். காந்தியாரை முதன் முதலில் சந்திக்க சென்றார்கள். காந்தியார் உடல்நல குறைவால் ஏழரை மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டார். அதை அடுத்து ஜின்னாவை சந்திக்க சென்றார்கள். அவர் மது, மாமிசம் சாப்பிடுவர். அதை சாப்பிட்டு விட்டு அவர் எட்டு மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டார்.
இதையும் படிங்க: அப்போ பொன்முடி; இப்போ துரைமுருகன்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் திமுக அமைச்சர்கள்!!

10 மணிக்கு வர சொன்ன அம்பேத்கர் மட்டும் எங்கே விழித்திருக்க போகிறார் என்று அம்பேத்கரை சந்திப்பதற்கு முன்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஆடி அசைந்தபடி அம்பேத்கர் இல்லத்திற்கு 11.30 மணிக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் கதவை தட்டி கேட்டபோது, 'எட்டு மணிக்கு வர சொன்ன காந்தியும் தூங்கிவிட்டார். 9 மணிக்கு வர சொன்ன ஜின்னாவும் தூங்கிவிட்டார். 10 மணிக்கு வர சொன்ன நீங்கள் நேரம் 11.30 மணி ஆகியும் விழித்து உள்ளீர்களே என்று கேட்டபோது அவர் அழகான பதிலைச் சொன்னார்.

'காந்தியினுடைய இன மக்கள் விழித்துக் கொண்டார்கள். எனவே அவர் நிம்மதியாக தூங்கிவிட்டார். ஜின்னாவின் உடைய மக்கள் விழித்துக் கொண்டு ஒரு நாடு கேட்டுவிட்டார்கள். எனவே அவரும் நிம்மதியாக தூங்கிவிட்டார். ஆனால் என்னுடைய சாதி மக்கள் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நான் விழித்திருக்கிறேன்' என்று சொன்னவர் அம்பேத்கர்.
அப்படிப்பட்ட மாமேதை ஆகையினாலே தான் அவரை ஒரு சாதியை சேர்ந்தவர் இல்லாமல் அரசாங்கமே அவரை கொண்டாடுகிறது. சாதி வித்தியாசம் இல்லாமல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்லாமல் அனைத்து சாதி மக்களும் அவர்கள் வீட்டில் அம்பேத்கர் போட்டோவை வைத்து வணங்க வேண்டும். அவர் யாருக்காக உழைத்தாரோ அதே மக்களுக்காக தான் எங்கள் கட்சியும் உழைக்கிறது. ஒரு கட்டத்தில் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவுவதாக பெரியாரை அழைத்தார். நான் இங்கிருந்தே போராடுகிறேன் நீங்கள் அங்கிருந்து போராடுங்கள் என்று சொன்னார். அது போன்று அனைத்து மக்களுக்காகவும் போராடுபவர் அம்பேத்கர், தென்னாட்டுக்கு ஒரு பெரியார் வடநாட்டுக்கு ஒரு அம்பேத்கர்" என்று புகழாரம் சூட்டினார்.

துரைமுருகன், முகமது அலி ஜின்னா குறித்து பேசும்போது அவர் மதுவுக்கும், மாமிசத்திற்கும் அடிமையானவர் என்று குறிப்பிட்டு பேசியது மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருந்தார் துரைமுருகன். சமீபத்தில் இந்து மதத்தை சர்ச்சையாகப்பஏசியதாக அமைச்ச்ர் பொன்முடியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமிய தலைவர் ஒருவரைப்பற்றி துரைமுருகன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு போட்டியாக ஒரு தலைவரும் கிடையாது.. விஜய்யை ரவுண்டு கட்டும் திமுக தலைவர்கள்.!!