சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பிரணிதா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி காவல் நிலையத்தில் புகார் மனு தொடர்பாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் பெண் எஸ்ஐ இடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த எஸ்.ஐ., பிரணிதா காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!
குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை! பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை! மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை!
காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை! இதுதான் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி!

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பாதுகாப்பில்லா_தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் தொல்லை... அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால்... திமுகவை தெறிக்கவிட்ட செல்லூர் ராஜு!