அதிமுக போடும் கணக்கை வேறொருவர் இன்னொரு இடத்திலிருந்து போடுவதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். அதிமுக போடும் கணக்கை பாஜக போடுகிறது என்கிற பொருளில்தான் தங்கம் தென்னரசு பேசியதாக கருதப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது கூட்டணி கணக்கு குறித்து திமுக - அதிமுக இடையே காரசாரமக விவாதம் நடைபெற்றது.
கடம்பூர் ராஜு (அதிமுக): அதிமுக என்கிற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கணக்கு கேட்ட கட்சிதான். ஆனால், இப்போது அதிமுக தப்புக் கணக்கு போடுகிறது.
கடம்பூர் ராஜு (அதிமுக): 2026இல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார்.
இதையும் படிங்க: அமித் ஷாவுடன் 15 நிமிட ரகசிய பேச்சுவார்த்தை... EPS டெல்லி விசிட் சீக்ரெட்!
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், சட்டப்பேரவையில் மறைமுகமாக இந்த விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் 8 மணி நேரத்தில் 3 கார்கள் - எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்..! தவிக்கவிட்ட விவசாயி மகன்..!