அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது. உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், பெங்களூரு புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையம் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: “அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்” - மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டரால் பரபரப்பு!

அந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளது, சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி தடையானை நீக்கிய உயர்நீதிமன்ற உத்தரவினை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விரிவான விசாரணையை துவங்க வேண்டும் என மனு அளித்திருந்தார். இப்பொழுது இது சம்பந்தமாக புதிய வழக்கு ஒன்றினை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து உள்ளார்.
தேர்தல் ஆணையம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் நீதிமன்றம் கால வரையறை (time fixed) நிர்ணயித்து உத்தரவு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றினைத் தொடர்ந்து இருக்கிறார். தேர்தல் ஆணையம் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த வா புகழேந்தி அவர்கள் தெரிவித்துள்ளதாவது மீண்டும் ,மீண்டும் வழக்கு தொடர்ந்து கொண்டே இருப்பது எடப்பாடி பழனிச்சாமி ஏற்பட்டிருக்கின்ற பயத்தை காட்டுகிறது தேர்தல் ஆணையத்தின் விரிவான விசாரணையை எதிர்கொள்ள தயங்குகிறார் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்கின்ற பயம் தொடர்வதைதான் இது காட்டுகிறது நீதிமன்ற ஆணையை ஏற்று தேர்தல் ஆணையம் விசாரணையை விரைவில் துவங்கும் இவர் தொடர்ந்துள்ள வழக்குகளையும் எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளார். புகழேந்தி. சூரியமூர்த்தி தொடர்ந்த பிரதான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இல்லையென்றால்.. அதிமுக அடமானத்துக்கு போயிருக்கும்.. மாஜி அமைச்சர் சரவெடி!!