ஒசூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், அதிமுக என்கிற கட்சி, டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து சேல் அக்ரிமெண்ட் எப்போது போடுவார்கள் என தெரியவில்லை, அதுவும் நடக்கும். அதிமுக அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இன்று வேதனை படும்படியாக செங்கோட்டையனை வைத்து பெரிய அரசியல் நடக்கிறது. உள்துறை அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்தார் பேசி வருகிறார் என்பதை ஏற்க முடியாது. டெல்லி சென்று சென்னை திரும்பும் வரை உள்துறை அமைச்சரை சந்தித்து மும்மொழி கொள்கை வேண்டாம். தொகுதி மறுசீராய்வு பேசியதாக கூறினார்கள். உள்துறை அமைச்சரை தான் சந்திக்க செல்கிறோம் என சொல்லாதது ஏன்? பாஜக வை ஆதரித்ததிற்காக முன்னாள் எம்பி நீக்கிய வரலாறு அதிமுகவில் உள்ளது.

கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றார் இபிஎஸ், வழி மொழிந்தவர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம்... தலைவர்கள் மாறி மாறி சொன்னதை மாற்றி திருட்டு தனமாக டெல்லிக்கு சென்று, அதிமுக அலுவலகத்தின் மீது அன்பு கொண்டு பார்த்ததாக கூறினார். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கோபமடைந்த இபிஎஸ் எந்த மனப்பக்குவத்துடன் அமித் ஷா வை சந்தித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு ஜூலை வரை கெடு... எடப்பாடியின் அமைதிக்குப் பின் காத்திருக்கும் பூகம்பம்...!

ஆயிரம் பழனிசாமியை பார்ப்பதற்கு தகுதி படைத்தவர் அமித் ஷா. எதற்காக சந்தித்தார்கள் ED, பயத்திற்காகவா என பல கேள்விகள் எழுகிறது. இபிஎஸ் வெளியே வந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா டிவிட் போட்டார். அண்ணாமலைக்கு அரசியல் அடிச்சுவடு தெரியவில்லை. அவருக்கு பத்திரிகையாளர்கள் தான் வேண்டும்.. அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்பது நாடறிந்த உண்மை. உள்துறை அமைச்சரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்காமல் நேரடியாக ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன..? அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் அதிமுக தலைவர்கள் படம் இல்லை என்றவர் செங்கோட்டையன். மறுநாள் நான் புறக்கணிக்கவில்லை.ஆனால் போகவில்லை என்றார்.

செங்கோட்டையனை வைத்து எதுவும் செய்ய முடியாது. ஈரோடு மாவட்டத்திலிருந்து சின்னசாமி, தோப்பு வெங்கடாசலம் என பலரும் வெளியேறி உள்ளனர். அம்மா எம்ஜிஆர் படத்தை போடாத இபிஎஸ் உடன் அவர் இத்தனை நாள் பயணிக்கலாமா..?அதிமுக ஏற்கனவே ICU வில் உள்ளது. அதை கீரிக்கொண்டே இருந்தால் என்னவாகும். நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செங்கோட்டையன் சந்தித்த புகைப்படம் பழமையானது. அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சந்தித்தது.. ஆதாரம் நிதி அமைச்சர் தலைக்கு தற்போது சாயம் பூசுவது இல்லை என்றார்.

பாதுகாப்பு, Y பாதுகாப்பு எதற்கு கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை நடைப்பயணமாக செங்கோட்டையன் சென்றால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
அமித்ஷா என்கிற மனிதன் மோடியை காண்பித்து 14 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் ஆட்சி என திமுக சொல்கிறது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பாஜக சொல்கிறது. அம்மா, எம்ஜிஆர் ஆட்சி அமையும் என இபிஎஸ் ஏன் கூறவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!