எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த பதில் மழுகப்பலானது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார்.
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் ஜெயலலிதா படத்தை போட வேண்டும் என்பது அடிப்படை. ஜெயக்குமார் பதில் மழுப்பல் பதில் தான். ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் அவமதிக்கும் விதமாகத்தான் ஜெயக்குமாரின் பதில் இருக்கிறது என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவரது ஆசையை கூறி வருகிறார் மக்களுக்கு எல்லாம் அல்வா கொடுக்கும் விதமாக செயல்படுகிறார், அதைத் தான் அவர் திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு உணர்த்துகிறார் என்றார். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பதற்காக ஒன்றிய அரசை அவர் பலி சுமத்துகிறார். கூட்டணி பலம் இருக்கிறது என்பதற்காக அவர் வெற்றி பெறுவோம் என்று எண்ணுகிறார். ஆனால் மக்கள் இந்த ஆட்சியின் மீது கோபத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்த ஆட்சியில் நடைபெறும் குற்ற சம்பவங்களால் வருத்தமும் மனவேதனையும் தான் வருகிறது.
இதையும் படிங்க: பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் - கொந்தளித்த சீமான் ...!

ஒரு காட்டாச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதாக தான் இருக்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் குடும்பத்தில் மட்டும்தான் பாதுகாப்பாக இருக்கக்கூடிய நிலை இருக்கிறது. இது 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். 2011 இல் திமுகவுக்கு பலத்த அடி விழுந்ததைப் போல் மாபெரும் தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும் அதை மறைப்பதற்காக படைப்பளத்தை நம்பி ஏழை எளிய மக்களை விலக்கி வாங்கி விடலாம் என்ற மம்மதையில் பேசி வருகிறார் முதலமைச்சர்.
உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியை திமுகவுக்கு மாற்று சக்தியாக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். உறுதியாக திமுக வீழ்த்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதல் முறையாக தமிழ்நாட்டில் இடம் பெற்று கூட்டணி ஆட்சி அமையும்.

ஒரு கட்சி வாங்கிய வாக்குகளை விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது. அதே நேரத்தில் சீமான் கடந்த ஆண்டுகளில் எல்லாம் பெரியாரை பற்றி எப்படி எல்லாம் புகழ்ந்து பேசினார் இன்று அந்தர் பெல்ட்டி அடித்து பெரியார் போன்ற மிகப்பெரிய மறைந்த தலைவர்களை எல்லாம் சீமான் இழிவாக பேசுவது அரசியல்வாதியான எனக்கு கூட வெட்கக்கேடாக இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: திமுக காசு, பணம் கொடுத்தும் சீமானுக்கும் நோட்டாவுக்கும் இவ்ளோ ஓட்டு.. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வியப்பு.!