தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12, 2025 அன்று, நயினார் நாகேந்திரன் புதிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து அண்ணாமலைக்கு என்ன பதவியை தரப்போகிறது பாஜக தலைமை என அனைவரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக, பாஜகவின் தேசியத் தலைமைக்குள் அவரை பாஜகவின் இளைஞர் பிரிவின் (பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா) தேசியத் தலைவராக நியமிப்பது குறித்து முடிவெடுத்துள்ளதாகூறப்படுகிறது.
இதையும் படிங்க: கற்பனை உலகில் வாழ்கிறார் முதல்வர்.. வாராந்திர டிராமாவை நிறுத்துங்க.. எகிறி அடித்த அண்ணாமலை.!!.

பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக யுவமோர்ச்சா தலைவராக தற்போது கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், பொறுப்பாளராகவும் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மாநிலத் தலைவர் பதவியை வகிக்காவிட்டாலும், அதற்கு இணையான முழு அதிகாரத்துடன் கூடிய பதவியில் தமிழகத்திலேயே நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிஞ்சுகள் மனதில் வன்முறை..! அரிவாள் வெட்டு சம்பவத்தில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!