அதிமுகவோட கூட்டணியே வைக்கக்கூடாது அப்படியே வைத்தாலும் இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கக்கூடாது என அடம்பிடிக்கிறாராம் அண்ணாமலை. தனது இந்த கன்டிஷன்களை ஒத்துக்கொள்ளவில்லை என்றால்நான் மாநிலத் தலைவர் பதவியையே தூக்கி எறிய தயார் என பாஜக தலைமையிடம் அண்ணாமலை முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.

அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இடையே டெல்லியில் நடந்த சந்திப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் நான்தான், ஓபிஎஸ் டிடிவியுடன் மீண்டும் சேரமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் அண்ணாமலை எங்கள் கட்சியினரை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கறாராக இபிஎஸ் சொன்னதாக கூறப்படுகிறது. இபிஎஸ் டெல்லியிலிருந்து கிளம்பிய அடுத்த நாளே அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. அவரை நேரில் வைத்து இந்த கூட்டணி அமைந்தே ஆகவேண்டும், அதிமுகவினரை எதுவும் சொல்லக்கூடாது, எடப்பாடி பழனிசாமி ஹ்சொல்வதை கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஏகப்பட்ட கன்டிஷன்களை அமித் ஷா போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து முன்கூட்டியே என்னிடம் எதுவுமே கேட்கவே இல்லையே என தனது தரப்பு நியாயங்களையும் எடுத்துக்கூறி அண்ணாமலை புலம்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை என்றும், அதனை அமித்ஷாவிடமே நேரடியாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியே கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ்ஐ நிறுத்தக்கூடாது, இல்லையென்றால் நான் தலைவர் பதவியையே ராஜினாமா செய்து கொள்கிறேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: பறிபோகிறதா அண்ணாமலையின் தலைவர் பதவி..? புதிய தலைவர் ரேசில் வானதி, தமிழிசை, நயினார்..!
ஆனால் அதிமுக கூட்டணி அமைந்தே ஆக வேண்டும் என அமித்ஷா விடாப்பிடி இருப்பதால் அண்ணாமலை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்த அண்ணாமலை, கட்சி நலனை விட தமிழக மக்களின் நலனே முக்கியம், எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது என சொல்லி ஹின்ட் கொடுத்தார்.
அதேபோல் கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, எந்த ஒரு தலைவர் மீதோ கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லியிருக்கிறேன். அதன் பொருள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக்கு பதவியின் மீது ஆசை இல்லை என தெரிவித்தார் இதன்மூலம் பதவியை ராஜினாமா செய்யக்கூட நான் தயார் என்ற மறைமுக மெசேஜை டெல்லி தலைமைக்கு அண்ணாமலை மீண்டும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!