பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. முக்கியமாக வரக்கூடிய ஏழாம் தேதி அவர் டெல்லி செல்ல இருக்கக்கூடிய நிலையில் அங்கே நடைபெறக்கூடிய பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதற்கு பிறகாக அந்த மையக்குழு கூட்டம் முடிந்த கையோடு, அவர் இமயமலை சென்று அங்கு ஒரு வார காலம் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த ஒரு வார காலம் அங்கு தியானத்தில் வந்து ஈடுபட இருக்கிறார். பாஜக மாநில தலைவர் மாற்றம் தொடர்பாக வந்து அவர் இன்றைய தினம் பேசுகையில் கூட நான் வந்து போட்டியிட போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தலைமை புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலலில் அவர் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...!

அதேபோல பார்த்தோம்னா அவருக்கு மத்திய அமைச்சர் அதாவது விரைவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பானது வழங்கப்பட இருப்பதாகவும் வந்து சொல்லப்படக்கூடிய ஒரு சூழல்ல மன அமைதிக்காக ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படக்கூடிய ஒரு சூழல்ல இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட, இந்த மண்ணில் தான் நான் இருப்பேன். இங்கேதான் திரிந்து கொண்டிருப்பேன். டெல்லிக்கு சென்றால் கூட ஒரே நாளில் திரும்பி வருபவன் நான் தான் எனக்கூறியிருந்தார்.

வரக்கூடிய ஏழாம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல இருக்கிறார். அங்கே தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் பங்கேற்கக்கூடிய பாஜக மையக்குழு கூட்டமானது நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. தமிழக பாஜகவிற்கான அடுத்த மாநிலத் தலைவர் யார் என்பது முதல் தேசியத் தலைவர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன நிம்மதிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல அண்ணாமலையும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: தலைமைக்கு தலைவலியாக மாறிய அண்ணாமலை... பாஜகவுக்கே சவால் விடும் 'மல'-யின் விழுதுகள்...!