பாஜகவுடன்தான் கூட்டணி என ஒப்பந்தத்திற்கு தயாராக இருந்ததால்தான் அன்புமணியின் கட்சி தலைவர் பதவியை நிறுவன தலைவர் ராமதாஸ் பிடுங்கி அதிரடி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. ‘‘எங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், கூட்டணி சேர்ந்தே ஆக வேண்டும் என கத்தியை கழுத்தில் வைத்து அதிமுகவை மிரட்டும் தைரியம் ஒரு கட்சிக்கு இருக்குமானால் அது பாஜக கட்சிக்கு மட்டும்தான் உண்டு என ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகின்றனர்.

இதனால் ஜெயலலிதா காலத்தில் எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிப்போச்சே என அதிமுக தொண்டர்கள் நொந்து போய் இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைவரும் தான் சென்னை வரும்போது பத்திரத்தில் கையெழுத்து போடவேண்டும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படியே அதிமுக சார்பில் கையெழுத்து போட நாங்கள் தயாராக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வக்ஃபு சட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை.. வரும் 20ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை நடத்த பாஜக முடிவு..!

அதே நேரத்தில்தான் பாமக தலைவரின் பதவியை தந்தை ராமதாஸே பறித்த சம்பவமும் நடந்திருக்கிறது என்கிறார்கள். அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியை மேலே கொண்டுபோக வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் பெருமளவு வெற்றி பெறலாம் என்று ராமதாஸ் சொன்னதோடு மட்டுமல்லாமல் அதற்கான அத்தனை வேலைகளையும் முடித்து வைத்திருந்தாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் மகன் அன்புமணியோ, பாஜகவுடன் சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்றதோடு மட்டுமல்லாமல் ராமதாஸையும் அழைத்துக் கொண்டு பிரசாரத்திற்கு வந்த மோடியை பார்த்து கூட்டணியில் சேர்ந்தார். தேர்தல் முடிவு பூஜ்ஜியமானதால் இகவும் கோபாகி விட்டார் ராமதாஸ். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற முடிவுடன் இருந்த அன்புமணி பாஜகவுடன் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்துப் போட தயாராகி வந்துள்ளார்.

எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்காத நிலையில் தான் தலைவர் பதவியின் பிடுங்கிவிட்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடமுடியாது என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் ராமதாஸ் என்கிறார்கள். இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பை தடுத்து நிறுத்தியுள்ளார் ராமதாஸ். இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தங்களிடம் வந்து பேச வைக்கும் தந்திரம் என்கிறார்கள் பாமகவினர்.

பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்தால் கேட்கும் சீட் கிடைக்காது. அதே நேரத்தில் அதிமுகவுடன் சேர்ந்தால் கேட்கும் சீட்டும் கிடைக்கும், செலவுக்கு பணமும் வந்துவிடும் என்ற தந்திரமும் அதில் அடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். தலைவர் பதவியை இழந்த அன்புமணியோ ஒட்டுமொத்த கட்சியையும் தன்னிடம் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற திட்டத்தில் களமிறங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊழல் புகார்களை வைத்துதான் கூட்டணி பேரம் நடத்துகிறது பாஜக.. அமைச்சர் ரகுபதி சரமாரி அட்டாக்.!!