பாஜக தலைவர் மோகன் சிங் பிஷ்ட், சில டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2020 டெல்லி கலவரம் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க சில காவல்துறையினர் முயற்சிப்பதாக அவர் அதிர்ரச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரிஸ்வான் என்ற போலீஸ்காரர் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாஜக தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஆம், 2020 ஆம் ஆண்டு நடந்த கலவரம் போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் சில காவலர்கள் கரவால் நகர் காவல் நிலையத்திற்கு வந்ததாக நிச்சயமாக புகார் வந்துள்ளது. போலீஸ்காரர் ரிஸ்வான் இதில் இருக்கிறார். இந்த வகையான வேலைகள் அவர் மூலம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, மக்கள் மீண்டும் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவர்தான் இந்துக்கள்- முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுப்பவர். இது குறித்து டெல்லி காவல் ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளிப்போம்.
இதையும் படிங்க: NDA கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழர் ஜி.கே.வாசன்..! பீகார் வங்காளத்தை தட்டித் தூக்க கூட்டத்தில் முடிவு..!
பிப்ரவரி 23, 2020 அன்று, வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. வன்முறை வகுப்புவாத மோதலாக திரும்பியது. இந்தக் கலவரங்களில் 53க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறைத் தீ மிகவும் பரவியதால், கோபமடைந்த கும்பல் கடைகளையும் வீடுகளையும் எரித்தது.

கலவரத்தை உருவாக்க சிலர் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி 18 அன்று, 2020 டெல்லி கலவரத்தின் போது வெறுப்பு குற்றங்களுக்காக உள்ளூர் காவல் நிலையத்தின் காவல் நிலைய அதிகாரி மற்றும் பிற காவல்துறையினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் மோகன் சிங் பிஷ்ட் வெற்றி பெற்றார். பிஷ்ட் 85 ஆயிரத்து 215 வாக்குகளைப் பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் அடில் அகமது கான் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அடில் அகமது கான் 67 ஆயிரத்து 637 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த இடத்தில், டெல்லி கலவரக் குற்றம் சாட்டப்பட்டவரும், ஓவைசியின் கட்சியின் வேட்பாளருமான முகமது தாஹிர் உசேன் போட்டியிட்டார், அவருக்கு 33474 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதையும் படிங்க: பிரபல லேடி டான் சோயா கான் கைது..! ரூ.1 கோடி ஹெராயினுடன் தட்டி தூக்கிய போலீஸ்..!