சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழே சௌந்தரராஜன் தலைமையில் கருப்புக்கொடி போராட்டமானது நடைபெற்று வருகிறது.
திமுக அரசை கண்டித்தும் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தினுடைய தலைவர்களை வரவேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். மேகதாது அணை கட்டியே தீருவோம் எனக்கூறும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எதிராகவும் மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் இந்த கருப்புக்கொடி போராட்டமானது பாஜகவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி எந்தக் கோட்டாவில் து.முதல்வரானார்..? திருப்பியடிக்கும் தமிழிசை
போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காவேரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. டெல்டா பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிவிட்டன. ஆனால் கர்நாடக அரசிடமிருந்து காவேரி நீரை திறந்துவிடச் சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக விவசாயிகளை விட அவரது ஹிந்தி கூட்டணி தான் முக்கியமாக இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார். அதேபோல மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரத பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சரை வலியுறுத்தவில்லை. இதனைக் கண்டித்து திமுகவிற்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். கண்டனத்திற்காக கருப்புக்கொடி, தமிழகத்தை காப்பாற்றப்போவது இந்த தாமரைக் கொடி தான் என்பதற்காக அதையும் கையில் வைத்திருக்கிறேன்.

தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதற்காக காவிக்கொடி ஏந்திய கைகள் இன்று கருப்புக்கொடியை ஏந்தி கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இது உண்மையிலேயே மனதிற்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாததாக உள்ளது. இன்று அரசு ஊழியர்கள் எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், இன்னைக்கு பால் முகவர்களுக்கு கூட பாலிற்கான விலையை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டுகிறார்கள். இப்படி எல்லா விதத்திலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

பள்ளிகள் சரியாக கட்டிடங்கள் கட்டப்படவில்லை, பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் சரியாக நிறைவேற்றப்படவில்லை, இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு ஊழல் வேறு, இதே மாதிரி கருப்புக் கொடியை ஏந்தி இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வீட்டு முன்னால் எதைச் சொல்லி நின்றார்கள், டாஸ்மாக்கே ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் நீக்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் அதை செய்யவில்லை. அவர்கள் அப்படி இருப்பதனால் தான் இன்னைக்கு உறுதிமொழி கொடுத்த பின்பும் மற்றவர்களை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்
அமித்ஷா மிகத் தெளிவாக இந்த தொகுதி வரையறையினால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும், அவர்களுக்கு வேண்டிய மாநிலத்தின் முதலமைச்சர்களைக் கூட்டி இன்னைக்கு ஒரு கூட்டத்தை கூட்டுகிறார்கள். தமிழக முதலமைச்சர் தங்களது தோல்வியை மறைப்பதற்கு இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் அவர்கள் மாநிலத்தில் உள்ள அவர்கள் ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். இவர்கள் திரும்பிப் போனவுடன் அவர்கள் மாநிலத்தைச் சார்ந்தவர்களே கேள்வி கேட்கப் போகிறார்கள். கனிமொழி சொல்கிறார் இவர்கள் கருப்புக்கொடி ஏந்துவது தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாம், நாங்கள் இன்று கருப்புக்கொடி ஏற்றுவது தமிழக மக்களின் நலனை காப்பதற்காகத்தான் நாங்க சொல்றோம் என்றார்.
இதையும் படிங்க: பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை, தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து.. பாஜக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா..?