சமூக வலைதள கணக்கும் இன்றளவில் இளசுகளின் முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. யாருக்கு எவ்வளவு பாலோவர்கள் உள்ளனர்.. எவ்வளவு லைக், கமெண்ட், ஷேர் வருகிறது என்பதே 2கே குழந்தைகளின் மிகப்பெரிய வாதமாக மாறி உள்ளது. எளிதில் எதிர் பாலினத்தினரிடம் பேசி பழகி, நட்பு வளர்க்கவும், காதல் மொழி பேசவும் இப்போதைக்கு ஷோசியல் மீடியா அக்கவுண்டுகள் அதி முக்கிய தேவையாக பார்க்கப்பட்டுகிறது.
முதலில் எல்லாம் ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ள இளைஞர்கள் எவ்வளவு மெனக்கெட்டார்களோ, தற்போது அவர்களது ஷோசியல் மீடியா கணக்கு விவரங்களை பெற அவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.

இந்நிலையில் சென்னை போன்ற பெருநகரத்தில் இரண்டு சிறுமிகளை கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள், அவர்களின் இன்ஸ்டா ஐடி விவகரங்களை கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த 16 மற்றும் 15 வயது சகோதரிகள் நேற்று முன்தினம் மாலை தட்டச்சு பயிற்சிக்கு சென்றுள்ளனர். 6 மணி அளவில் தட்டச்சு பயிற்சி முடித்துவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள், சிறுமிகளை வழிமறித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. 15 ஆண்டுகளாக பலே திருட்டு.. கள்ளக்காதல் ஜோடி கைது..!

அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், அங்கிருந்து நகர முயன்றுள்ளனர். ஆனால் சிறுமிகளை அகல விடாமல் தடுத்த அந்த சிறுவர்கள் உங்களது இன்ஸ்டாகிராம் ஐடி தாருங்கள் என கேட்டுள்ளனர். முன் பின் அறிமுகம் இல்லாத அந்த சிறுவர்கள், எடுத்த எடுப்பில் அவ்வாறு பேசியதும், அவர்களின் அணுகுமுறையில் சிறுமிகளுக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. இதனால் அந்த சிறுமிகள், வழிமறித்த அந்த சிறுவர்களை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

உடனே அந்த 3 பேரில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்துள்ளான். சிறுமிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளான். யாரை திட்டுற? பார்த்து பேசிக்க? என்கிற ரீதியில் சிறுமிகளை மிரட்டிவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். அழுத படியே வீட்டிற்கு சென்ற சகோதரிகள், இது குறித்து தங்களது தந்தையிடம் கூறியுள்ளனர். தனது பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம் குறித்து அறிந்த சிறுமிகளின் தந்தை, இது குறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருவிக நகர் போலீசார், புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இன்று காலை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் என இருவரை கைது செய்தனர்.
இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் சம்பவத்தன்று ரெட்டேரியை சேர்ந்த கனிஷ்கர் என்ற நபர், இரண்டு சிறுவர்களுடன் வந்து சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுத்து தெரிந்தது. சிறுமிகளிடம் கத்தியை காட்டி மிரட்டியதும் அவர் தான் என தெரிந்தது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் கனிஷ்கர் என்ற நபரை தேடி வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரத்தில் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் சிறுமிகள் இருவரை, மூன்று பேர் கொண்ட கும்பல், நடுவழியில் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்த காலத்திலும் இப்படியா? வாரம் ரூ.200 சம்பளம்.. கொத்தடிமைகளாக சிக்கிய 48 பேர் மீட்பு..!