மாணவர்கள் இனி திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வரைய அரசு தடை என்ற தகவல் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் காலண்டருடன் கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை முன் மாணவிகள் புகைப்படம் எடுத்து திமுக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை நூலை தந்த திருவள்ளுவர் தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. உருவமற்று இருந்த திருவள்ளுவருக்கு வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியம் உயிர் கொடுத்தது. திருக்குறள் சமய சார்பற்று எழுதப்பட்டு இருந்ததால் எந்தவித சமய அடையாளங்களும் இல்லாமல் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டது.

சமய சார்பற்ற திருவள்ளுவர் படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதோடு, அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது. அதே சமயம் சமீக காலமாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி வருகின்றன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதையும் படிங்க: 2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை .. வியக்க வைத்த ஓவியா ஆசிரியர்
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. கால் நுாற்றாண்டு கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்க இருக்கும் சிலைக்கு, 'பேரறிவு சிலை' என, பெயர் சூட்டி தி.மு.க., அரசு மகிழ்கிறது. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தி.மு.க., எப்போதும் போற்றி வருகிறது" என்று எழுதியிருந்தார்.
கன்னியாகுமரிக்கு நேற்று வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையின் நுழைவுவாயிலில் "பேரறிவு சிலை" என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை,'பேரறிவு சிலை' எனப் பெயர் மாற்றக் கூடாது' என எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வரைய தமிழக அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. “இதுபோன்ற தடைகள் மன்னராட்சி காலத்தில்கூட கிடையாது... வெள்ளைநிறம் மட்டும் மதக்குறியீடு கிடையாதா? அப்படியென்றால் இந்துக்கள் அடிமைகளா?” 2000 வருடங்களுக்கு முந்தைய திருவள்ளுவரது உடையை தீர்மானிக்க நேற்று வந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் கூடிய மாணவிகள் சிலர் காவி உடையில், நெற்றியில் விபூதி பட்டை அடித்து ஓம் என்று பொறிக்கப்பட்ட காலண்டருடன் சென்று போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, கன்னியாகுமரி குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை வெள்ளி விழாவாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மாணவர்கள் வரைந்த திருவள்ளுவரின் ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மாணவர் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் வகையில் வரைந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த ஓவியம் கண்காட்சி அரங்கில் இருந்து அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: 13 வயதிலேயே கூட்டணி என்கிற கருவாட்டு ருசியுடன் கைத்தடி ஊன்றி தேர்தல் களத்துக்கு வந்த திமுக!