திருப்பரங்குன்றம் மலையில் பராமரிப்பு என்பது ஜீரோ உள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் பராமரிப்பே இல்லை. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.
பக்தர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மலைமீது சென்று வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார் அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ஐந்து நபர்களுக்கு மேல் மழை மீது செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் எல்.முருகன், இரண்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒரு கட்சி நிர்வாகி என நான்கு பேர் மற்றும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: 'திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? மிரட்டி உருட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம்...' அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை..!

பழைய பாதையில் வழியாக மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு மழைக்கு பின்புறம் உள்ள புதிய படிக்கட்டில் கீழே இறங்கி வந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்:
பாரம்பரிய பாதை எதுவோ, பண்டைக்காலம் தொட்டு எந்த வழியில் மக்கள் செல்வார்களோ அந்த வழியில் சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறேன். காசி தமிழ் சங்கத்தை முடித்துவிட்டு இன்று காசி விசுவநாதர் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். காசிக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை என பார்க்க வேண்டும். நமது ஊரிலிருந்து காசிக்கு போவதை லட்சியமாகவும், வட இந்தியாவில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் வருவதை இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இணைப்பாக இந்த காசி தமிழ் சங்கம் உள்ளது.

இந்து அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியே வரவேண்டும் என்பதுதான் எங்கள் நீண்ட கால கோரிக்கை. பராமரிப்பு என்பது ஜீரோ உள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் பராமரிப்பே இல்லை. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அந்த வழியையும் சரியாக பராமரிக்காமல் இருக்கிறார்கள். மலைமேல் வேல் எடுத்துச் செல்வதையும் முறையாக செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.
எனவே இந்து அறநிலையத்துறை உடனடியாக பராமரிப்பில் ஈடுபட வேண்டும். பக்தர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மலைமீது சென்று வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர்கள் கோவிலை விட்டு வெளியே வருவது தான் சிறப்பு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்களை ஏற்க மாட்டீங்க.. காசு மட்டும் வேணுமா.? திமுக மீது மத்தியமைச்சர் எல்.முருகன் அட்டாக்.,!