தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காதது மட்டுமல்லாது துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டுக்கு எதிராகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பல கட்டமாக தொடர் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதம் என்றும், ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது; மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது தீர்ப்பளித்துள்ளது. இதனை சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் “தலைவர் அவர்களே அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட முன்படிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டமன்ற பேரவை நிறைவேற்றிய சட்ட முன்படிவர்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததோடு அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு அதிகாரமில்லை.. ஆர்.என்.ரவி செய்தது சட்ட விரோதம்..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில் தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தது சட்ட விரோதமானது என்றும், அந்த சட்ட முன்முடிவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மற்றுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்ற கழகத்தின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!