இந்துக்களின் சைவ -வைணவ சமயங்களை விலைமாது கதை சொல்லின் ஒப்பிட்டுப் பேசினார் அமைச்சர் பொன்முடி. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அமைச்சர் சேகர் பாபு கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் செய்து மாபெரும் சர்ச்சையை தூண்டி உள்ளார். இதனால், திமுகவில் இருக்கும் இந்துக்களே கடும் கோபத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண் மேகலா சந்துரு சமூகவலைதளத்தில் சாட்டையடி விமர்சனத்தை வைத்துள்ளது உணர்வுகளை தூண்டும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில் , ''திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிராக இது இதெல்லாம் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக பார்த்து பார்த்து செய்வது போல இருக்கிறது. போன வாரம் பொன்முடி அவர்கள் வந்து கேவலமான விஷயத்தை பற்றி பேசினார்.

கேவலம் என்றால்கூட வெளியில் போய் சொல்லலாம். இவர் இந்த மாதிரி பேசினார் என்று சொல்லலாம். ஆனால் இவர் பேசியதை காதில் ஏற்ற முடியாது. படு கேவலமான விஷயத்தைப் பற்றி ஹிந்து மக்களின் நம்பிக்கையை பற்றி நாமம் போடுவது, பட்டை போடுவது என்று பேசியிருந்தார். இந்த வாரம் புதிய வரவாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆரம்பித்து வைத்து இருக்கிறார். ஹிந்து மக்கள் புனிதமாக நேசிக்கிற ஒரு விஷயம் கோபுரம். அதை கொண்டு போய் கலைஞர் ஐயா சமாதியில் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ராம நவமி கொண்டாட்டம்..! அயோத்தியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்..!
எனக்கு அது புரியவில்லை. கலைஞர் சமாதியில் வைக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. கோபுரத்தை கொண்டு போய் சமாதியில் வைப்பீர்களா? நீங்கள் கொத்தடிமையாக நிரூபிப்பதற்குப் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனால், இந்து மக்களை மட்டும் ஏன் தொடர்ந்து புண்படுத்துவது போல் நடந்து கொள்கிறீர்கள்? இஸ்லாமியர்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. கிறிஸ்தவத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. நீங்கள் பெரியார்வாதியாக உங்களை வெளியில் காட்டிக் கொள்கிறீர்கள்.

அப்படி இருக்கும் போது உங்கள் கொள்கை சார்ந்து ஏதோ ஒரு விஷயத்தை செய்து நிரூபியுங்கள். ஆனால் எல்லாமே தொடர்ச்சியாக இந்து மக்களின் மனதை எப்படியாவது கஷ்டப்படுத்த வேண்டும். அதற்கு என்ன விஷயத்தை பண்ணலாம் பார்த்துப் பார்த்து செய்வது போல் இருக்கிறது. இஸ்லாத்தில் இருக்கிற விஷயத்தை செய்யலாமே? செய்ய மாட்டீர்கள். கிறிஸ்தவத்தில் இருக்கிற விஷயத்தை பண்ணலாமே செய்ய மாட்டீர்கள். ஏனென்றால், ஹிந்து மக்கள் தான் இழித்த வாயர்கள்.

அவர்களுக்கெதிராக என்ன வேண்டுமானாலும் நாம் செய்யலாம். ஆனால் நமக்கு வந்து ஓட்டை போட்டு விடுவான் என்கிற நம்பிக்கையில் நீங்கள் செய்து வருகிறீர்கள். இதற்கெல்லாம் தக்க பதிலடியாக 2026 தேர்தலில் உங்களுக்கு தெரியும். இந்த மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்தினோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எல்லாம் தாண்டி எனது ஒரே ஒரு கேள்வி என்னவென்றால், இவ்வளவு ஹிந்து மக்களை கேவலப்படுத்துகிறார்கள். நம்பிக்கையை கேவலப்படுத்துகிறார்கள். அந்த கட்சியில் இருக்கிற ஹிந்துகளுக்கு கொஞ்சமாவது ரோஷம் இல்லையா? நீங்களாவது போய் கேட்கலாமே... ஏன் ஐயா அப்படி செய்கிறீர்கள் என்று? பட்டை போடுவதைப் பற்றியே நீங்கள் இப்படி செய்கிறீர்கள்? கோபுரத்தை கொண்டு போய் சமாதியில் ஏன் வருகிறீர்கள்? என்று திமுகவில் இருக்கிற ஹிந்துக்கள் கேட்க வேண்டாமா ?
போனவாரம் பொன்முடி... இந்த வாரம் சேகர்பாபு... தொடர்ந்து இந்து மத உணர்வுகளையும், இந்துமக்களின் நம்பிக்கையையும் தூண்டும் வகையில் செயல்படும் திமுக அமைச்சர்கள் இந்துவுக்கு விரோதமான திராவிட மாடல் ஆட்சி இனி முடியவேண்டும் மக்கள் இனி தூங்கக்கூடாது... எழுந்து கேள்வி கேட்க வேண்டும் pic.twitter.com/iAdsxREJ8h
— பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் ) (@ChandrasekarVi1) April 17, 2025
நீங்க எல்லோரும் போய் அதே திராவிட கட்சியிலும் இருந்து கொள்கிறீர்கள். கோயிலுக்கு போய் பட்டையும் போட்டுக் கொள்கிறீர்கள். எனக்கு புரியவில்லை என்னவென்று..? இதே போன்று தொடர்ந்து ஹிந்து மக்களுடைய நம்பிக்கையை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்திக் கொண்டிருக்கிற சேகர்பாபு அவர்களுக்கும், பொன்முடி அவர்களுக்கும் திராவிட கட்சியில் இருக்கிற அத்தனை பேருக்கும் 2026 தேர்தல் தக்க பதிலடியாக இருக்கும்'' என விம்மி வெடித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் அலறவிட்டு அனுப்பியிருக்காங்க... அண்ணாமலையை பங்கம் செய்த சேகர் பாபு...!