நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள இபாஸ் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 29-ந்தேதி மாவட்டம் முழுவதும் கருப்புகொடி போராட்டமும், ஏப்ரல் 2-ந்தேதி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டமும் நடத்த நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினரும் அறிவித்துள்ளனர்.

உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் தங்கும் விடுதி, சுற்றுலா வாகனம், உணவகம், விவசாயம், ஆட்டோ ஓட்டுனர் என மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கத்தினர்: இபாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 6000 சுற்றுலா வாகனங்களும் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணிக்கு தயார் ஆனா.... அறிவாலயத்திற்கு சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ...!
இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 29ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டமும், ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் அன்றைய தினம் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அவுரங்கசீப்பே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை… வடக்கனுக்கு வாய்ப்பு கிடைத்து விடுமா? மார்தட்டும் தங்கம் தென்னரசு..!