ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்லை நாட்டி, உ.பியில் அயோத்தியாவுக்கு விமான சேவையையும் தொடங்கி வைத்தார்.

அப்போது நடந்த நிகழ்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நமது புனிதமான அரசியலமைப்புச் சட்டத்தை ஆயுதமாகப் காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி எங்கு பார்த்தாலும் அதிகாரப்பசியுடன் இருக்கிறது. அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் தாத்பரியத்தை நசுக்கி, மதிக்காமல் ஆட்சியில் இருந்தது.
இதையும் படிங்க: “எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...!
அரசியலமைப்பின் உத்வேகமும், உணர்வும் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடிமக்கள் குறியீடு இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் குறிக்கிறது, இதை நான் 'மதச்சார்பற்ற சிவில் சட்டம்' என்று அழைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தபின் ஒரு மதச்சார்பற்ற சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நாட்டின் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள், அரசியலமைப்பை மக்கள் தங்கள் சட்டைப் பையில் சுமந்து செல்வதால், காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள்.
நமது அரசியலமைப்புச் சட்டம் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடுகளை வழங்கியது. ஆனால் காங்கிரஸ் அந்த சலுகைகள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் அடைவதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை.

அரசியலமைப்பில் சமூக நீதி என்று பாபா சாகேப் அம்பேத்கரின் கனவுக்கு எதிராக காங்கிரஸ் சென்று, அவரை முதுகில் குத்தியுள்ளது. கர்நாடகாவில், காங்கிரஸ் அரசாங்கம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினரின் உரிமைகளைப் பறித்து, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று அம்பேத்கர் வலியுறுத்தியிருந்தார்.
காங்கிரஸ் ஒரு சில அடிப்படைவாதிகளை மட்டும் மகிழ்ச்சியடையச் செய்துவிட்டு, மீதமுள்ள சமூகத்தினர் மோசமான நிலையில் கல்வியறிவு இல்லாதவர்களவாகவும், ஏழைகளாகவும் உள்ளனர். காங்கிரஸின் தவறான கொள்கைக்கு மிகப்பெரிய உதாரணம் வக்ஃபு சட்டம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2013 வரை வக்ஃபு சட்டம் நடைமுறையில் இருந்தது, ஆனால் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவும், அதன் திருப்திக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும், 2013 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், அரசியல் ஆதாயங்களுக்காக வக்ஃபு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை விட அதிகமாக வைக்கப்படும் வகையில் வக்ஃப் சட்டம் மாற்றப்பட்டது. இது அவருக்கு செய்த மிகப்பெரிய அவமரியாதை.

உண்மையாகவே முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு சிறிதளவு கருணை இருந்தால், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லிமை அதன் கட்சித் தலைவராக நியமிக்கலாமே. ஏன் அதைச் செய்யக்கூடாது? நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட டிக்கெட் கொடுக்கிறீர்கள், முஸ்லிம்களுக்கு 50% கொடுக்கிறீர்கள் அவர்கள் வெற்றி பெறும்போது, அவர்கள் தங்கள் எண்ணங்களைப் காங்கிரஸ் தலைமையிடம் பகிர்ந்து கொள்வார்கள், ஆனால் காங்கிரஸ் அதைச் செய்யாது. கட்சிக்குள் காங்கிரஸ் எதையும் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் குடிமக்களின் உரிமைகளை மட்டும் காங்கிரஸ் பறிக்கிறது, இது யாருடைய நலனுக்காகவும், குறிப்பாக முஸ்லிம்களின் நலனுக்காகவும் செயல்படக்கூடாது என்ற அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘வக்ஃபு திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’.. காங்கிரஸ் கடும் வேதனை..!